கேண்டீன் கலவரங்கள் - சென்னை இசை விழா 2018

கேண்டீன் கலவரங்கள் - சென்னை இசை விழா 2018

"நேத்து NGS கேன்டீனில்  ஒரு சாதா தோச சாப்ட்டேன் வெல நூறு  ரூபா தான் " ன்னு என் தங்க சொன்னப்போ எனக்கு பகீர்ன்னுது.

இப்டி வெலவாசி விக்கரச்ச இந்த வெலைக்கு தோச போட இவாளுக்கு எப்டி கட்டுபடியாரதுன்னு ஒரே கொழப்பம். பாவம் லோகத்லேயும் நல்லவா இருக்காளோல்யோ..anyway இவா சர்வர யெல்லாம் பெரிசா வீபூதி இட்டுக்க சொல்லிட்டு வரவாள்ட்ட "என்ன வேணும்?"ன்னு கேக்கறதுக்கு பதிலா "எண்ணன்ணா ஸாப்படறேள்?"ன்னு கேக்க சொல்லி, பில் போடரச்ச சாப்ட்ட ஐட்டத்தெல்லாம் கால்குலேட்டரில் போட்டு கூட்டாம ஒரு ஸ்லேட்டு பலப்பம் வச்சு கூட்டி பில் போடச் சொன்னா, தோச வெலல இன்னும்  முப்பது ,நாப்பது ரூபா ஏத்த சான்ஸ் இருக்கு; யாராவது அவாள்ட்ட சொன்னா தேவல!

- ரங்கநாதன் கணேஷ்