"கேதார்நாத்" (காதல்!?) யாத்திரை

"கேதார்நாத்" (காதல்!?) யாத்திரை

பாலிவுட்டில் அபிஷேக் கபூர் இயக்கி சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி கான் நடித்துள்ள "கேதார்நாத்" திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு பாஜக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த திரைப்படம் 2013ம் ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், இந்த திரைப்படம் இந்து பெண்ணுக்கும் இஸ்லாமிய ஆணுக்கும் இடையில் ஏற்படும் காதலை மையமாக கொண்டிருப்பதாகவும், மேலும், "காதல் ஒரு யாத்திரை"  என்று படத்தின் போஸ்டரில் குறிப்பிட்டிருப்பது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளதாகவும் அதனால், இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் வழங்ககூடாது எனவும் பாஜகவை சேர்ந்த  அஜேந்திர அஜய் தணிக்கை குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.