கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் - காங்கிரஸ் தொண்டர்கள் கொலை

கேரளத்தில் முழு அடைப்பு போராட்டம் - காங்கிரஸ் தொண்டர்கள் கொலை

கேரளத்தில் காங்கிரஸ் இளைஞரணி தொண்டர்கள் 2 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, அக்கட்சி சார்பில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸார் மறியலில் ஈடுபட்டனர். பல இடங்களில் பேருந்துகள் மீது கல் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இரு தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, கேரளத்தில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டம் நடத்த மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் டீன் குரியகோஸ் ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்தார். அதன்படி, கோழிக்கோடு, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடைகள், உணவகங்கள் திங்கள்கிழமை மூடப்பட்டன. பல இடங்களில் காங்கிரஸ் இளைஞரணியினர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனிடையே, காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக இருவரை கைது செய்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.