கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி பேரணியை தொடங்கிவைத்தார் ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத்

கேரளாவில் கிருஷ்ண ஜெயந்தி பேரணியை தொடங்கிவைத்தார் ஆர். எஸ். எஸ் தலைவர் மோகன் பகவத்

கேரளா கோழிக்கோட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழா பேரணி.  ஆர். எஸ். எஸ் .தலைவர் மோகன் பகவத் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கிருஷ்ண ஜெயந்தி விழாவினை முன்னிட்டு பேரணியை தொடங்கிவைத்தார். கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோர்க்கு இப்பேரணி தொடங்கும் முன்னர் பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது.

பேரணியை தொடங்கிவைத்து பேசிய மோகன் பகவத் 'நாம் அனைவரும் சமுதாயத்திற்கு தொண்டாற்ற வேண்டும் நடந்தவற்றை எண்ணி கவலை கொள்ளாமல் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டும்' இவ்வாறு அவர் கூறினார்.

' எல்லையில்லா நட்பு தடையில்லா அன்பு ' இது தான் இந்த ஆண்டு பேரணியின் மையக்கரு.