கேரளாவில் கோவில் மீது தாக்குதல்

கேரளாவில் கோவில் மீது தாக்குதல்

கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்து விரோத நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றன. சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மக்களிடையே ஆதரவு இல்லாததால் செய்வதறியாது விழிக்கிறது கேரள அரசு. அதனால், இந்து கோவில்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. கடந்த புதனன்று இரவு செங்கனூர் மாவட்டத்தில் உள்ள வெண்மொனியில் இருக்கும் ஸ்ரீ.புவனேஸ்வரி கோவிலில் சி.பி.எம் ஆட்கள் நுழைந்து கோவிலை அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர். 

நாயர் சமூகத்திற்கு சொந்தமான இந்த கோவிலுக்குள் சோடா மற்றும் பீர் பாட்டில்களை வீசியுள்ளனர்.சபரிமலை விஷயத்தில் நாயர் சமூகத்தினர் பக்தர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. எனவே, இத்தகைய தாக்குதல்களால் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது கேரள கம்யூனிச அரசு. இந்த தாக்குதலில் காயமடைந்த பக்தர் அனூப் முரளி கூறுகையில் வந்தவர்கள் இரும்பு கம்பி, வாள் முதலிய பயங்கர ஆயுதங்களோடு வந்ததாக கூறுகிறார்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஜெபின் வர்கீஸ், சிபி ஆபிரகாம் மற்றும் ஷிபின் ராவுத்தர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஏற்கனவே குற்ற பின்னணி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெபின் வர்கீஸ் சி.பி.எம் கட்சியின் ஆலப்புழா மாவட்ட உறுப்பினராவார்.

கேரள மாநில பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோவில் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டனம் செய்துள்ளன. இந்த தாக்குதலை கண்டித்து நாயர் சமூகத்தின் அமைப்பு இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.