கேரளாவில்  14 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக

கேரளாவில் 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது பாஜக

இந்தத் தேர்தலையொட்டி, பாரத் தர்ம ஜன சேனா (பிஜேடிஎஸ்) கட்சியுடனும் பி.சி.தாமஸ் தலைமையிலான கேரள காங்கிரஸுடனும் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இந்நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளதாக பாஜக நேற்று அறிவித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் நேற்று டெல்லியில் கூறும்போது, “கேரளாவில் பாஜக 14 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பிஜேடிஎஸ் 5 தொகுதிகளிலும் கேரள காங்கிரஸ் 1 தொகுதியிலும் போட்டியிடுகின்றன. இம்மாநிலத்தில் சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களின் ஆதரவையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெற்றுள்ளது” என்றார்.