கேளம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் திமுகாவினர் பட்டாசு வெடித்து ரகளை

கேளம்பாக்கத்தில் நட்சத்திர ஓட்டலில் திமுகாவினர் பட்டாசு வெடித்து ரகளை

காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர தனியார் ஓட்டலில் நேற்று இரவு திமுக பிரமுகர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் அனுமதியின்றி நடத்தி உள்ளதாக செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

எல்லப்பன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குடிபோதையில் தகராறு செய்து உள்ளனர் பிறகு அது கை கலப்பு ஆகி திமுகவினர் ஓட்டலின் ஜன்னல்கள் மற்றும் நேம் போடுகளை அடித்து நொறிக்கி ஹோட்டலில் ரகளையில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் பட்டாசு வெடித்து உள்ளே உள்ள சில பொருட்களை அடித்து நொறிக்கியுள்ளனர். இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு இதுபோன்ற பல வரலாறுகள் உள்ளது. டீ கடை, பிரியாணி கடை, பியூட்டி பார்லர் என அனைத்து இடத்திலும் கை வைத்துள்ள திமுகவினர் இப்போது ஒரு கட்டம் மேலே சென்று நட்சத்திர ஓட்டலில் கைவைத்து உள்ளதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.