கொங்கு மண்டலத்தை வசமாக்கும் அதிமுக,பாஜக கூட்டணி

கொங்கு மண்டலத்தை வசமாக்கும் அதிமுக,பாஜக கூட்டணி

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வெற்றி வாய்ப்பை வழங்கிய கொங்கு மண்டலத்துக்கு, முதல்வர் ஜெயலலிதா அதிக அளவிலான அமைச்சர்களையும் கொடுத்திருந்தார். இந்த மண்டலத்தைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமிதான் தற்போது தமிழக முதல்வராகவும் உள்ளார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தை சார்ந்த நபர் முதல்வராக உள்ளதால் கொங்கு மக்கள் அதிமுகவை ஆதரிக்க உள்ளனர். தானாகவே கிடைத்த  இந்த அறிய வாய்ப்பை தக்க வைத்து கொள்ளவே பெரும்பாலான மக்கள் விருப்படுகின்றனர்.

 மேலும், இப்பகுதியைச் சேர்ந்தவர்களே கட்சியில் அதிகாரமிக்க அமைச்சர்களாகவும், சட்டப் பேரவைத் தலைவர், துணைத் தலைவர்களாகவும் உள்ளனா்.

     கடந்த 2014 மக்களவைத் தேர்வில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 தொகுதிகளை வென்றது. சில தொகுதிகளில் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், பல தொகுதிகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்திலும் அதிமுக வென்றிருந்தாலும், மேற்கு மண்டலத்தின் தலைநகராக கருதப்படும் கோவையில் மட்டும் அதிமுக வேட்பாளர் பி.நாகராஜன், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர் சி,பி. ராதாகிருஷ்ணனை வெறும் 42,016 வாக்குகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்திருந்தார்.

     அதிமுக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி இது மட்டும்தான். அதே நேரம், கடந்த முறை பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாஜக, தேமுதிக, பாமக கட்சிகள் இந்த முறை அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அதேபோல், கடந்த மக்களவைத் தேர்தலில் கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய 4 தொகுதிகளிலும் பிரதான எதிர்க்கட்சியான திமுக 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த வகையில் இந்த மண்டலத்தில் கடந்த மக்களைவத் தோ்தலில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கட்சிகள் அனைத்தும் தற்போது ஒரே கூட்டணியில் இருப்பதாலும் (மதிமுக, கொ..தே.க தவிர) இந்தக் கட்சிகள் மட்டுமே சராசரியாக 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றிருப்பதாலுமே அதிமுக கூட்டணியை மெகா கூட்டணியை என்றே அதிமுக, பாஜகவினர் அழைத்து வருகின்றனர்.

     இந்தத் தொகுதிகளில் அதிமுக பலம் வாய்ந்ததாக கருதப்படுவதாலேயே கடந்த கால தேர்தல் முடிவுகள், இப்போது அமைக்கப்பட்டுள்ள பலமான கூட்டணி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாஜகவுக்கு உள்ள கணிசமான வாக்கு வங்கி போன்றவை அதிமுக அணிக்கு சாதகமான அம்சங்கள்