கொடுமைகளை பொறுப்பதும் தவத்தின் ஒரு பகுதியே

கொடுமைகளை பொறுப்பதும் தவத்தின் ஒரு பகுதியே

நாமும் தான் படித்திருக்கிறோம், கேட்டிருக்கிறோம் புராண காலத்தில் தவம் செய்யும் முனிவர்களுக்கு அசுரர்கள் நிறைய துன்பங்கள் கொடுத்தார்கள் என்று. 

இன்றும் கலியுகவரதனான ஐயப்பனை தரிசிக்க மாலையணிந்து விரதமிருந்து மலைக்கு செல்கிறார்கள் பக்தர்கள். இவர்கள் சந்நிதானத்தில் முந்தைய இரவு தங்கி மறுநாள் காலையில் ஐயப்பனுக்கு நெய்யபிஷேகம் செய்வார்கள். இதற்கு "விரிவைகல்" என்று பெயர். நேற்று இரவு விரிவைகல் அனுசரிப்பதற்க்காக குழந்தைகள் உட்பட சுமார் 5000 பக்தர்கள் சந்நிதானத்தில் தங்கினர். ஆனால், இவர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சாரம், கழிவறை போன்றவற்றை துண்டித்து விட்டது பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிச அரசு.

இதனால் எல்லாம் பக்தர்களை தடுத்துவிட முடியுமா என்ன? சரண கோஷத்தையே துணையாக கொண்டு "விரிவைகல்" அனுசரித்து இன்று நெய்யபிஷேகம் செய்து முடித்தனர் பக்தர்கள். 

 கொடுமைகளை பொறுப்பதும் தவத்தின் ஒரு பகுதியே! என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.