கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை அதிகரிப்பு

கொப்பரை தேங்காய்க்கு ஆதார விலை அதிகரிப்பு

கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 2 ஆயிரம் ரூபாய் அளவுக்கு உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் எண்ணெய்க் கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 9 ஆயிரத்து 521 ரூபாய் ஆகவும், பந்து கொப்பரைக்கான குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டாலுக்கு 9 ஆயிரத்து 920 ரூபாய் ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இது தேங்காய் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.