கொல்கத்தாவில் ஸ்டாலின் பேச்சுக்கு சில பதில்கள்

கொல்கத்தாவில் ஸ்டாலின் பேச்சுக்கு சில பதில்கள்

 2019-ல் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் உள்ள மோடியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு, ஒன்று சேர்ந்து நடத்திய கூட்டத்தில், தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலின் கொக்கரித்த கொக்கரிப்பு விமர்சனத்திற்குறியது.  சில  முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டு விமர்சனம் எழுதப்பட வேண்டும்.  முதலில்  “இந்தியாவின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்தான் வரும் மே மாதம் நடக்கவிருக்கும் ஜனநாயகப் போர்களம். என்றது.  இரண்டாவது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மோடிக்கு பயம். என்றது,  மூன்றாவது, “இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து மக்களிடம் மோதல் போக்கை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டை மீட்க போராட்டம். என்றது,  நான்காவாதாக ஊழல் இல்லாத ஆட்சி என்கிறார் மோடி, ஆறு மாத காலமாக ரஃபேல் குறித்து பேசி வருகிறோம்.  போர் விமானம் வாங்க அரசு நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுத்துள்ளார் .  விஜய் மல்லையா மற்றும் சிலர் வெளிநாடு தப்பி சென்றது ஊழல் இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.   திருவாளர் ஸ்டாலின் தான் முதலமைச்சர் ஆக முடியாத விரக்தியில், தட்டு தடுமாறி பேசியுள்ளார். இருந்தாலும்  இவரது கேள்விக்கு தெளிவான பதிலை நாம் கொடுக்கலாம். 

 

      சென்னையில் நடந்த சிலை திறப்பு விழாவில், அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் என சர்வாதிகார தனமாக பேசிய ஸ்டாலின், ஏன் கொல்கத்தாவில் ராகுல் காந்தியைப் பற்றி வாய் திறக்கவில்லை.  இதற்குறிய காரணத்தை அவரது அடிபொடியாள்வர்கள் விளக்குவார்களா அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர்கள்  சரியான காரணத்தை கூற முற்படுவார்களா என்ற கேள்வி எழுகிறது.  முதலில்  இந்தியாவின் இரண்டாவது சுதந்திர போராட்டம் என கூறும் ஸ்டாலினுக்கு சில கேள்விகள்.  1975-ல் அவசர நிலை பிரகடனப்படுத்தி ஜனநாயக மரபுகளை குழித் தோண்டி புதைத்த இந்திராகாந்திக்கு எதிராக நடத்திய போராட்டத்தை இரண்டாவது சுதந்திர போராட்டம் என கூறியவர் கருணாநிதி,  இவரது  கருத்துக்கு மாறாக ஸ்டாலின்  கருத்து இருக்கிறது.  சுதந்திர போராட்டம் நடந்த போது தி.மு.க.வின் தாய் கழகமான தி.க.வின் தீர்மானம் என்ன என்பதை தயவு செய்து திருப்பி பார்க்க வேண்டும்.   தி.மு.க.வின் ஸ்தபகர் திரு. அண்ணாதுரை , வெள்ளையர்களே, தாங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் வெளியேறுங்கள், சென்னை ராஜதானியை மட்டும் நீங்களே இங்கிலாந்திருந்து கொண்டு ஆளவேண்டுமென்று தீர்மானம் போட்டவர்கள்.  அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் மோடியை எதிர்க்க, பாராளுமன்ற தேர்தலை இரண்டாவது சுதந்திர போராட்டம் என்கிறார்.  இதற்கு உள்நோக்கம் உள்ளது சுதந்திர போராட்டம் என்பது தனித் தமிழ்நாடு பிரிவினையை ஊக்குவிக்கும் செயலாகவே தெரிகிறது.

      திருவாளர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஜனநாயகம் பட்ட பாடு உலகிற்கே தெரியும்.   2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு  நடந்த தேர்தலில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்றதும்,  இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை மாநகராட்சியில் நடந்த தேர்தலை ரத்து செய்து மறு தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள்.  சுமார் 40 வார்டுகளுக்கு மீண்டும்  தேர்தல் நடத்தப்பட்டது .   இது ஜனநாயக படுகொலை என இன்று கூட்டணியில் உள்ள இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் தி.மு.க.வை கண்டித்தது  நினைவுக்கு வருகிறது.  தி.மு.க. ஆட்சியில் ஜனநாயக படுகொலைகள் நடந்த வரலாறு பற்றிய விவாதம் நடத்தினால் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்பதை ஸ்டாலின் நினைத்து பார்க்க வேண்டும்.   பல கட்சிகளை உடைத்த பெருமை தி.மு.க.விற்கு உண்டு.   ஊழல் புகார் கொடுக்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற வலது சாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் திரு.கல்யாணசுந்தரம் அடித்து விரட்டப்பட்ட சம்பவத்தை, கூட்டணியில் உள்ள தா.பாண்டியன் கூற ஸ்டாலின் சம்மதம் தெரிவிப்பாரா?  ஆகவே சுதந்திரத்தை எதிர்த்தவர்கள், இன்று பதவி ஆசைக்காக இரண்டாவது சுதந்திரம் என கூறுவதும், ஜனநாயக போர்களம் என கூறுவதும்  அபத்தமானது      

      கடந்த ஆறு மாத காலமாக ரஃபேல் விமானம் கொள்முதல் சம்பந்தமாக விவாதம் நடைபெறுகிறது,  இதில் முறைகேடு நடந்திருக்கிறது என கூறியும்  மோடி ஏன் வாய்திற்க்கவில்லை .  தனது நண்பர் அம்பானிக்கு ஆதரவாக ஹெச்.ஏ.எல். நிறுவனத்திற்கு கொடுக்காமல் தடுத்தார் என்கிறார் ஸ்டாலின்.  ஆனால் ரஃபேல் பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக எந்த குற்றச்சாட்டையும் மோடி மீது வைக்கப்படவில்லை.  மாறாக தி.மு.க. பங்கு கொண்ட ஐ.மு.கூ. ஆட்சியில் நடந்த முறைகேடுகளில் கைமாறிய பணம் எவ்வளவு என்பதும், யார் யாருக்கு கொடுக்கப்பட்டது என்பதும் வெட்ட வெளிச்சாமாக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டது.  2ஜி வழக்கில் விடுதலை பெற்ற ராசாவின் பொறுப்பில் தொலை தொடர்பு துறை இருந்த போது,  22 நிறுவனங்களுக்க ஒதுக்கப்பட்ட உரிமத்தை, வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது மட்டுமில்லாமல், உரிமைத்தை ரத்து செய்ய உத்திரவிட்டது என்பதை ஸ்டாலினுக்கு நினைவுப் படுத்த வேண்டும்.   சர்காரியா கமிஷன் விஞ்ஞான பூர்வமான ஊழல் என வர்ணனை செய்ததும், ஊழல் காரணத்திற்காக ஒரு ஆட்சியை கலைத்தும் தி.மு.க. ஆட்சி தான் என்பதை மறந்து விட்டு மோடி மீது குற்றம் சுமத்துவது வேடிக்கையாக இருக்கிறது.   

        டெல்லி மெட்ரோ ரயில் கார்பரேஷனுக்கு கொடுக்காமல், மெட்ரோ பாதை அமைக்கும் அனுபவமே இல்லாத அம்பானி நிறுவனத்திற்கு டெல்லி விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் ஆர்டர் ஏன் கொடுக்கப்பட்டது என அன்றைய பிரதமர்  மன்மோகன்சிங்கிடம் தி.மு.க. கேள்வியை எழுப்பியதா?   ஹெச்.ஏ.எல். நிறுவனம் ஆண்டாண்டு காலமாக ஹெலிகாப்டர்களை தயாரித்து வரும் போது, அகஸ்தா வெஸ்ட்லேண்டு  இத்தாலி நிறுவனத்திடம் ஹெலிகாப்டர்கள் வாங்கியது ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடையாது.   காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு பேரங்களில் RM க்கு பதிலாக ( ரக்ஷா மந்திரி)  RV   ( ராபர்ட் வதோர ) ஈடுபட்டு வந்து உலகிற்கே நன்கு தெரியும்.   ரஃபேல் விமான பேரத்தில் ராபர்ட் வதோராவின் திட்டம் பலிக்கவில்லை என்பது உண்மையா?   யு.பி.ஏ. ஆட்சியில் ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தசால்ட் நிறுவனத்துடன் பேரம் பேசினார்.  ஆனால் தசால்ட் நிறுவனம் சஞ்சய் பண்டாரியுடன் பேச மறுத்து விட்டார்கள்.  ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டார் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதோராவின் நெருங்கிய நண்பர்.  2009 அக்டோபர் மாதம் ஆயுத வியாபாரி சஞ்சய பண்டார்,  ராபர்ட் வதோராவிற்காக லண்டனில் ரூ19 கோடி மதிப்புள்ள பங்களா வாங்கி கொடுத்துள்ளார்.  இது எதற்காக என்பதை ராகுல் காந்தி பொது மக்களிடம் விவரமாக விளக்குவாரா?  வாங்கி கொடுத்த பங்களாவின் விலாசம் 12, எலரடன் ஹவுஸ் பிராந்தன் ஸ்குயர்.  லண்டன்.  இந்த மகா பெரிய மோசடி ஆயுத வியாபாரிக்கு தசால்ட் நிறுவனம் பேச மறுத்த காரணத்தால், ரஃபேல் ஒப்பந்தம் முடிவாகவில்லை என்ற உண்மையை ஏன் மறைக்க வேண்டும்.  இவ்வாறு தெளிவாக குற்றச்சாட்டுகளை முன் வைத்து குற்றச்சாட்டுகள் சுமத்தினால் பதில் கிடையாது.  மாறாக ரஃபேல் விமானத்தில் யாரும் பேரம் பேசாத போது, முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்பது தெரிந்தும் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள்.

      மோடி ஆட்சியின் மீது வைக்கும் மோசமான குற்றச்சாட்டு இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து மக்களிடம் மோதல் போக்கை உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.விடமிருந்து நாட்டை மீட்க போராட்டம் என்கிறார்.  நாட்டை பிளவுப் படுத்தியவர்கள் யார் என்பதை தயவு செய்து திரும்பி பார்க்க வேண்டும்.   தமிழகத்தில் பிரிவினையை பிரகடனப்படுத்தியவர்கள் தி.மு.க.வினர்.  அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்றவர்கள்.  தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். மலையாளி என மொழியால் பிரிவினையை தூண்டியவர்கள் தி.மு.க.வினர். சென்னையில் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக வன்முறை சம்பவம் நடந்த போது, பழ.நெடுமாறனுக்கு ஆதரவாக அறிக்கை விடுத்தவர்கள் தி.முக.வினர்.  சாதிகளிடையே மோதல் போக்கை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைந்தவர்கள் தி.முக.வினர்.  இந்துக்களை இழிவுப்படுத்தி, சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெற குள்ளநரி தந்திரிம் செய்தவர்கள் தி.மு.க.வினர்.  இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக தனித் தமிழ்நாடு கோரிக்கையை அடிக்கடி எழுப்புவர்கள் தி.மு.க.வினர்.  கடந்த ஐந்தாண்டு காலமாக மத்தியில் மோடி அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு, பிரிவினை வர்ணம் பூசுபவர்கள் தி.மு.க.வினர்.   நாட்டை துண்டாட நினைக்கும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக களம் அமைத்து கொடுத்தவர்கள் தி.மு.கவினர்.  ஆகவே நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் செயலுக்கு சொந்தக்காரர்கள் தி.மு.க.வினர்.

             இலங்கை பிரச்சினை என்றால், கச்ச தீவு கண் முன்னே வந்து ஊசலாடும்.  கச்ச தீவை தமிழகத்தின் அனுமதியில்லாமல் ,இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் இந்திரா காந்தி.  மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள தீன்பிகா பகுதியை பங்களா தேஷ் நாட்டிற்கு தாரைவார்த்து கொடுத்தவர் நரசிம்ம ராவ் என்ற காங்கிரஸ் கட்சிக்காரர்.  1962-ல் சீன யுத்தத்தில் அக்சை சென் பகுதியை சீனாவிடமிருந்து மீட்க கூட முன்வராத பிரதமர் நேரு ஒரு காங்கிரஸ் கட்சிகாரர்.   காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் தான் எல்லையில் உள்ள பகுதிகள தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. 

 

      அபத்தமாக ஒரு வாதத்தை ஸ்டாலின் முன் வைக்கிறார்.  விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி இந்தியாவிலிருந்து தப்பிக்க விட்டது ஊழல் இல்லையா என்ற கேள்வியை எழுப்பினர்.  நிராவ் மோடியின் வழக்கு சம்பந்தமாக சி.பி.ஐ.யில் உள்ள inernal emails   தகவல்கள் மூலம் குற்றவாளிகள் எவ்வாறு கண்டறியப்பட்டது என்பதை நிராவ் மோடிக்கு கிடைக்கும் படி செய்துள்ளார்.   நிராவ் மோடி வழக்கை விசாரணை செய்து வரும் அதிகாரி ராஜீவ் சிங் தனது அறையை பூட்டிவிட்டு சென்ற பின்னர்,   called Computer Emergency Response Team ( CERT) of the ministry of information technology  உதவியுடன் நிராவ் மோடி சம்பந்தமாக பதியப்பட்ட டேட்டாவை தரவிறக்கம் செய்வதற்கு துணையாக இருந்தவர் அலோக் வர்மா. ஐ.டி.பி.ஐ வங்கியில் பண மோசடி செய்த குற்றத்திற்காக வழக்கு தொடுக்கப்படட நிராவ் மோடியின் வழக்கை விசாரணை செய்த சி.பி.ஐ.  நிராவ் மோடிக்கு ஆதரவாக அலோக் வர்மா செயல்பட்டதாக குற்றச்சாட்டில் உண்மையுள்ளதாக சி.வி.சி. குறிப்பிட்டுள்ளது.   இதில் ஊழல் புரிந்தது காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் அலோக் வர்மா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

      ரூ600 கோடி ஐ.டி.பி.ஐ. வங்கியில் மோசடி செய்த தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட    எல்.ஓ.சியை நீர்த்துப் போக செய்தவர் அலோக் வர்மா.   சிவசங்கரன் மீது எல்.ஓ.சியை நீர்த்து போக செய்ததும் மட்டுமில்லாமல், டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு 3-ல் இருந்த வழக்கை   Bank Securities and Fraud Cell ( BS&FC) Bangaluru  மாற்றியது அலோக் வர்மா .   வழக்கை மாற்றியதின் காரணமாக ப.சிதம்பரத்தை காப்பற்ற கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தப்பட்டது.   இந்த வழக்கில் செய்த தில்லு முல்லுவை போல், மல்லைய்யாவின் வழக்கிலும் அக்டோபர் 2015 –ல் வழங்கப்பட்ட எல்.ஓ.சி.ஐய ( LoC )  வைத்து இங்கிலாந்து நீதி மன்றம் நாடு கடத்த உத்திரவிட்டதை நீர்த்து போக செய்யவே,  தனக்கு நெருக்கமான அதிகாரி  ஏ.கே.சர்மா மூலமாக, குடியேற்ற அதிகாரிகளுக்கு, மல்லைய்யாவிற்கு வழங்கப்பட்ட எல்.ஓ.சி. என்பது தங்களின் தகவலுக்கு மட்டுமே தவிர அவரை தடுத்து கைது செய்யவது கிடையாது என தகவல் கொடுக்கப்பட்டு, மல்லையாவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் அலோக் வர்மா .

      உண்மைகள் இவ்வாறு இருக்க கொல்கத்தா கூட்டத்தில் மோடி மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்து செய்த பிரச்சாரம் போலியான, சுயநலவாதிகளின் பிரச்சாரமாகும்.  எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்திருப்பதால் மோடிக்கு பயம் வந்து விட்டது என கூறும் ஸ்டாலின்,  ஏன் மோடியை எதிர்க்க கொள்கையற்ற கட்சிகளின் கூட்டணி என்பதை விளக்கவில்லை.  மோடியை எதிர்க்க எலியும் புனையும் ஒன்று சேர்ந்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.  கொல்கத்தாவில் நடந்த கூட்டம் வெத்து வேட்டு கூட்டம் என இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களின் விமர்சனம் என்பதை ஸ்டாலின் மறக்க கூடாது.

-    ஈரோடு சரவணன்