கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்

மும்பையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள பெண்டான்ய்ல்  என்ற போதை பொருளை மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  கைப்பற்றப்பட்ட போதை பொருளின் எடை சுமார் 100 கிலோவாகும். இதன் மதிப்பு சர்வதேச சந்தையில் சுமார் 1000  கோடி ரூபாயாகும். இவை வெளிநாட்டுக்கு கடத்த பட இருந்ததாக தெரிகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை மும்பை போதை பொருள் தடுப்பு பிரிவின் உதவி கமிஷ்னர் ஷிவ்தீப் லாண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.