"கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள்"

"கோயில் நிலங்களை மீட்பதில் அறநிலையத் துறை செயல்பாடுகள்"

ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை மாவட்டம், பரவையில் அமைந்துள்ள அருள்மிகு வடக்குவாசல் செல்லியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்கக் கோரி கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்லியம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களிடம் இருந்து மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் நிலங்களை மீட்பதற்கான இந்து அறநிலையத் துறையின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனத் தெரிவித்தனர்.