கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக அரசு வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜக அரசு வெற்றி

கோவா சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது.

தற்போது 36 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு. கோவா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 19 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், 20 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாஜக அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கோவா முதல்வராக திங்கள்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு (இரவு 2 மணியளவில்) பிரமோத் சாவந்த் பொறுப்பேற்றார். அரசியல் குழப்பத்தை தவிர்க்கவே அவர் நள்ளிரவில் பொறுப்பேற்றதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.