கோவையில் மேலும் ஒரு பாக்., பயங்கரவாதி

கோவையில் மேலும் ஒரு பாக்., பயங்கரவாதி

பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளிடம் தொடர்பில் இருந்ததாக, கோவையில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரை பிடித்து கோவை ஆர்.எஸ்.புரம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை காந்தி பார்க் பகுதியில் நகைப்பட்டறையில் பணியாற்றி வந்தவர் வங்கதேச இளைஞர் ஃபாரூக் கௌஸீர். இவர் பாகிஸ்தான் முஜாஹுதீன் என்ற வாட்ஸ்ஆப் குழுவில் செயல்பட்டு வந்துள்ளார். 

செல்ஃபோனை பழுதுபார்க்க எடுத்துச் சென்றபோது இத்தகவல் அம்பலமாகியுள்ளது. இதன் அடிப்படையில் கௌஸீரை கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில், துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது. வங்கதேசத்தைச் சேர்ந்த ஃபாரூக் கௌஸீர் கடந்த 15 ஆண்டுகளாக கோவையில் வசித்து வந்துள்ளார். அவரிடம் கோவையை அடிப்படையாகக் கொண்ட ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.