சக்தி குறைந்த குண்டு வெடிப்பு - காலிந்தி விரைவு ரயில்

சக்தி குறைந்த குண்டு வெடிப்பு - காலிந்தி விரைவு ரயில்

உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரில் இருந்து பிவானி நகருக்கு புறப்பட்ட காலிந்தி விரைவு ரயிலில் சக்தி குறைந்த குண்டு வெடித்தது. இதில், யாரும் காயமடையவில்லை. இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: கான்பூரிலிருந்து ஹரியாணா மாநிலம், பிவானி நகருக்கு காலிந்தி விரைவு ரயில் புறப்பட்ட சில நிமிடங்களில் குண்டு வெடிப்பு நேரிட்டது. முன்பதிவில்லா பெட்டியில் உள்ள கழிப்பறையில் புதன்கிழமை இரவு 7.10 மணிக்கு குண்டு வெடித்தது. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பட்டாசுகள் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தடயவியல் நிபுணர்கள் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிராஜ்பூர் ரயில் நிலையத்துக்கு விரைந்து வந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரும் சோதனை நடத்தி வருகின்றனர்.