"சங்கீத இங்கிதங்கள்" -  இசை விழா 2018

"சங்கீத இங்கிதங்கள்" - இசை விழா 2018

"சங்கீத இங்கிதங்கள்"

Table manners என்பது உணவு உண்ணும்பொழுது நாம் கடைபிடிக்கவேண்டிய சில நற்பழக்கங்கள் அதே போல Sabha Manners என்பது சங்கீத கச்சேரிகளில் நாம் கடைபிடிக்கவேண்டிய சில நற்பழக்கங்கள்.அவை என்ன?

சென்னையில் பல ஆண்டுகளாக நவம்பர் கடைசி வாரம் முதல் ஜனவரி முதல் வாரம் வரை சுமார் 30 சபாக்கள் பல்வேறு கலை நிகழ்சசிகளை ரசிகர்களுக்கு வழங்கி வருகின்றன இவற்றில் பெரும்பான்மையானவை கர்நாடக சங்கீத கச்சேரிகள் இன்னொரு சுவையான விஷயம் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பெரும்பான்மையானவை இலவசமாக வழங்கப்படுகின்றன இதை சென்னை வாசிகள் மட்டுமின்றி வெளி மாவட்டம்,மாநிலம் மற்றும் நாடுகளிலிருந்தெல்லாம் ரசிகர்கள் சென்னை வந்து நிகழ்சசிகளை பார்த்து, கேட்டு,ரசித்து,மகிழ்வர்.அதோடு மட்டுமின்றி இந்த நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் புகழ் பெற்ற உணவு தயாரிப்பாளர்களால் உணவு விடுதிகள் நடத்தப்பட்டு ரசிகர்கள் நாவிற்கும் விருந்து கிடைக்கும்.சுருக்கமாக சென்னை மாநகரமே விழா கோலம் பூண்டிருக்கும் தருணம் இது.

இந்நிகழ்ச்சிகளில் ரசிகர்களாகிய நாம்,கலைஞர்கள் மற்றும் சபா நிர்வாகிகள் எவ்வண்ணம் நடந்து கொண்டு நிகழ்விற்கு மேலும் மெருகு சேர்க்கலாம் என்ற சிந்தனையில் உருவானதே இக்கட்டுரை.

1,ரசிகர்கள்.

ü  இசை நிகழ்ச்சிகள் கலைவாணி வந்தமரும் கோயில்கள்.எனவே அதற்கான மதிப்பும் மரியாதையும் அளிக்க வேண்டியது நம் கடமை.

 ஆடைகள் நம் பாரம்பரியத்தை குறிக்கும் வண்ணம் இருத்தல் நல்லது பெண்கள் இது fashion parade இல்லை என்று உணர்ந்து உடையணிவது உசிதம்

ü  நிகழ்ச்சி ஆரம்பமாகும் நேரத்துக்கு ஐந்து நிமிடங்கள் முன்னமே யே வந்து சரியான இருக்கையில் அமரவும்

ü  செல்போன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ü  அக்கம்பக்கமுள்ளவர்களுடன் அரட்டை கூடாது.

ü  பாடல்களை கூடவே உரக்க பாடிக்கொண்டு வரக்கூடாது.

ü  நிகழ்வின் நடுவே புத்தகம் செய்தித்தாள் செல்போன் பார்ப்பது அறவே கூடாது.

ü நடுவில் வெளியே செல்ல வேண்டிய அவசியம் வந்தால் இரு பாடல்களுக்கு இடையே உள்ள இடைவெளியை மட்டுமே உபயோகிக்க வேண்டும்

ü  மீண்டும் அரங்கத்தில் நுழைவதும் பாடலின் நடுவில் இருக்க கூடாது அப்படி நுழைய நேரின் ஏதேனும் ஓரமாக சென்று அமரலாம்

ü  நிகழ்ச்சியின் நடுவில் நொறுக்குத்தீனி உண்ணக்கூடாது.

ü  ஐந்து வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை அழைத்து வருவதை தவிர்ப்பது நல்லது.

ü  தயவு செய்து மிருதங்க தனி ஆவர்த்தனம் ஆரம்பிக்கும் பொழுது எழுந்து செல்ல வேண்டாம்.இது உச்ச நிலை Bad Manners.

ü  கச்சேரி முடிந்த பின் எழுந்து நின்று கரகோஷம் செய்து கலைஞர்களை பாராட்டலாம்.முடிந்தால் அவர்களை அரங்க அறையில் சந்தித்து பாராட்டி ஊக்குவிக்கலாம்.ஆனால் செலஃபி வேண்டாம்.

2. இசைக்கலைஞர்கள்

ü கச்சேரி அமைப்பை நறுக்கென்று அமைக்கவும்.மிக சரியான நேரத்தில் தொடங்கவும்.அதைவிட முக்கியம் குறிப்பிட்ட நேரத்தில் முடித்துக்கொள்ளவும்.

ü  புதிய ராகம் எதாவது பாடும் பட்சத்தில் அதன் பெயரை ஆரம்பத்திலேயே அறிவித்து விடவும்.

ü இரண்டு மணி நேரம் கச்சேரி என்றால் ஏழு பாடல்கள் சாத்தியம் அதில் மூன்றாவது தமிழ் பாடல்கள் இருக்கும் வண்ணம் அமைத்துக்கொள்ளவும்.

ü  அந்தந்த நாட்களின் முக்கியத்துவத்திற்கேற்ப பாடல்களை தேர்வு செய்யவும் (இன்று வைகுண்ட ஏகாதசி எனவே பெருமாள் மீதான பாடல்கள்)

3. சபா நிர்வாகம்

ü  நாற்காலிகள் சௌகரியமாக இருக்கும் வண்ணம் பார்த்துக்கொள்ளவும். இரண்டு வரிசைகளின்  இடையில் இருக்கும் இடைவெளி இரு அடிகளாவது இருக்கட்டும்  

ü  குளிர் பதனம் மிக அதிகமாக போக கூடாது.

ü  ஓய்வறைகள் சுத்தமாக இருக்க வேண்டும்.

ü  கச்சேரியின் நடுவில் யாரேனும் பிரமுகர்களை பேச அழைத்தால் பேச்சு  15 நிமிடங்களுக்கு மேலே போகாமல் பார்த்துக்கொள்ளவும் அனைவரும் வருவது பாடலை கேட்பதற்கே;

ü  கச்சேரியின் ஜீவ நாடி ஒலிபெருக்கிகளே! அவை நவீனமாகவும் சிறப்பாகவும் இருக்கட்டும் ஒலிபெருக்கியில் பரிமாணம் (size ) அதிகரித்தால் அதன் தரம் அதிகரிக்கும் என்ற மூட நம்பிக்கை தேவையில்லை!

 Wishing all rasikaas a delightful season!

 -ரங்கநாதன் கணேஷ்