சஜ்ஜன் குமார் சரணடைய அவகாசம் கிடையாது - தில்லி உயர்நீதிமன்றம்

சஜ்ஜன் குமார் சரணடைய அவகாசம் கிடையாது - தில்லி உயர்நீதிமன்றம்

1984ம் ஆண்டு  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் படுகொலையை தொடர்ந்து சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சஜ்ஜன் குமாருக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கியது. 

இதனை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி வரை சரணடைய அவகாசம் தரவேண்டும் என்று கோரி சஜ்ஜன் குமார் தில்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் தனது சொத்துக்களை தனது வாரிசுகளிடையே பிரித்து கொடுக்க அவகாசம் வேண்டியிருப்பதாகவும், மேலும் தண்டனையை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் எனவே, தனக்கு சரணடைய அவகாசம் வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த தில்லி உயர்நீதிமன்றம் அவர் உடனடியாக சரணடைய வேண்டும் என்று கூறியுள்ளது.