சத்திரபதி சிவாஜியின் ஹிந்து சாம்ராஜ்யம்

சத்திரபதி சிவாஜியின் ஹிந்து சாம்ராஜ்யம்

பாரதத்தை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் மாமன்னர் (சத்ரபதி) சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர்வீரனாகவும் சிறந்த ஆட்சியாளராகவும் நிர்வாகியாகவும் வல்லமை பெற்றவர். அவர் ராணுவத்தில் பல சீர்திருத்தங்களையும் உத்திகளை பயன்படுத்தி எண்ணற்ற கோட்டைகளையும் பகுதிகளையும் கைப்பற்றிய ஹிந்த சாம்ராஜ்யத்தை விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. முகலாயர்களிடம் ஆங்கிலேயர்களிடமும் சிக்கித் தவித்த ஹிந்துக்களின் எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாக விளங்கியவர் மாமன்னர் (சத்ரபதி) சிவாஜி. ஹிந்து சாம்ராஜ்யத்தை மீண்டும் இந்த மண்ணில் நிறுவினார். மக்களின் இதயத்திலும் நினைவுகளிலும் நீங்கா இடம்பிடித்த இத்தகைய வீரம் மிக்க மன்னன் சத்ரபதி சிவாஜி பிறந்த தினத்தை நாடு முழுவதும் ஹிந்து சாம்ராஜ்ய தினம் என்று கொண்டாடப்பட்டு வருகிறது.