சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல்

சத்தீஸ்கரில் முதல் கட்ட தேர்தல்

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டபேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவு இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் பாஜக மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்று 15 ஆண்டுகளாக ஆட்சியை தக்க வைத்து வருகிறது. எனவே, இந்த முறையும் வெற்றி பெரும் முனைப்பில் உள்ளது..

 இன்று வாக்கு பதிவு நடக்கும்  18 தொகுதிகளில்  10 தொகுதிகள் நக்ஸ்லைட்டுகள் நடமாட்டமுள்ள பதற்றமான தொகுதிகளாகும். தேர்தல் நடக்கும் தொகுதிகளில் போலீசார், மத்திய ரெசர்வ் போலீஸார், எல்லை பாதுகாப்பு படையினர் ஆகியோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்த மாநிலத்தின் மொத்த 90 தொகுதிகளில் மீதமுள்ள  72 தொகுதிகளுக்கு வரும் 20ம் தேதி இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதலமைச்சர் ரமண் சிங் ராஜ்நந்தகான் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். இந்த தொகுதிக்கும் இன்று வாக்கு பதிவு நடைபெறுகிறது.