சந்திரனில் விக்ரம் லேண்டர் !!

சந்திரனில் விக்ரம் லேண்டர் !!

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து 'விக்ரம் லேண்டர்' ஆய்வு கலம் நிலவில் நாளை தரையிறக்கப்படுகிறது.  இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2  விண்கலத்தில் இருந்து 'விக்ரம் லேண்டர்' ஆய்வு கலம் 47 நாட்களுக்கு பிறகு நாளைஅதிகாலை 1:30 மணியிலுருந்து2:30 மணிக்குள் தரையிறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்திய பிரதமர் மோடி நாளை இஸ்ரோ நிலையத்திற்கு நேரடியாக வந்து நிலவில் தரையிறங்குவதை பார்வையிடவுள்ளார். இத்திட்டம் வெற்றி பெற்றால் நிலவில் விண்கலனை தரையிறக்கிய நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெரும்.