சந்திராயன் -2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது

சந்திராயன் -2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் - 2 என்ற விண்கலத்தை ஜூலை 22ல் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான'இஸ்ரோ' வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.  புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன் -2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. சந்திராயன்- 2ல் இருந்து செப்., 2ம் தேதி விக்ரம் லேண்டர் பிரிந்து சந்திரனின் மேற்பரப்பில் சுற்றும். பின்னர்,,செப்., 7 ம் தேதி நிலவில் மெதுவாக தரையிறங்கி, விக்ரம் லேண்டர் ஆய்வை துவங்கும்.