சன்யாசிகளின் கூட்டம் - பினராய் விஜயன் அதிர்ச்சி

சன்யாசிகளின் கூட்டம் - பினராய் விஜயன் அதிர்ச்சி

சபரிமலை விவகாரத்தில் கேரள கம்யூனிச அரசு வீம்பு பிடிப்பது பல தரப்பிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐதீகத்தை குலைப்பதற்காக இரண்டு இளம் பெண்களை கோவில் ஊழியர்கள் செல்லும் வழியாக ரகசியமாக கோவிலுக்குள் நுழைய வைத்தது ஐயப்ப பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலையில் மகர ஜோதியுடன், நெய் அபிஷேகமும் நிறைவு பெற்று நடை சாத்தப்பட்டது.

நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கமத்தில் பல மடாதிபதிகள் ஒன்று கூடி கேரள அரசின் போக்கிற்கு தங்கள் எதிப்பை வெளிப்படுத்தினர். இதனால், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் அதிர்ச்சியடைந்துள்ளார். 


எப்போதும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காத மாதா அமிர்தானந்தமயி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,"சபரிமலை ஐதீகம் தெரியாததால் தான் பல விரும்பதகாத நிகழ்வுகள் நடந்து விட்டன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி பள்ளிக்கூடங்கள் நடத்துவது பாலின பாகுபாடு ஆகாது. அது போல தான் சபரிமலையும்." என்று கூறினார்.

சுவாமி சிதானந்தபுரி பேசும் போது,"சபரிமலை விவகாரத்தால் இந்துக்களை ஒன்றிணைத்த பெருமை கேரள முதல்வரையே சாரும்." என்றார்.

இப்படி பல மடாதிபதிகள் கேரள அரசிற்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பதும், மக்கள் இந்த கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டிருப்பதும் கேரள கம்யூனிச அரசிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.