சபரிமலைக்கு சென்று வந்த பலன்

சபரிமலைக்கு சென்று வந்த பலன்

கேரள அரசின் தூண்டுதலால் சபரிமலைக்கு சென்ற இரு பெண்களில் ஒருவரான பிந்து அதன் பின் விளைவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் கோழிக்கோடு மாவட்டத்தில் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.  அதே பள்ளியில் தான் அவர் மகளும் படித்து வந்தாள். அவர் சபரிமலை சென்று வந்தபின் அங்கு அவரது 11 வயது மகளை மற்ற மாணவர்கள் புறக்கணித்தனர்.    அவருக்கும் அங்கு பணி புரிய முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கேரள அரசு அவரை பாலக்காடு அருகே உள்ள சம்பர்பூர் என்ற இடத்தில் இருக்கும் பள்ளிக்கு இடமாற்றம் செய்தது. 

ஆனால்,பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் அங்கும் அவருக்கு பிரச்சனை உருவாகியுள்ளது. தனது மகளை ஆனைக்கட்டியில் உள்ள வித்யாவனம் பள்ளியில் சேர்க்க பிந்து முயற்சித்தார். "முதலில் என் மகளை பள்ளியில் சேர்த்துக்கொள்வதாக ஒப்புக்கொண்டார்கள். இப்போது என் மகளை பள்ளியில் சேர்த்தால் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் என்று கூறி மறுக்கிறார்கள்." என்று வருத்தத்துடன் கூறுகிறார்.