சபரிமலையில் திருநங்கைகள்

சபரிமலையில் திருநங்கைகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நான்கு திருநங்கைகள் இன்று சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக ஞாயிறு அன்று அவர்கள் சபரிமலை செல்ல முயன்ற போது சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். எனவே, அவர்கள் டிஜிபி. ஹேமசந்திரனிடம் முறையிட்டனர். அவர், கோவில் தந்திரியுடனும், பந்தள மன்னர் குடும்பத்துடனும் கலந்தாலோசித்து இந்த நான்கு பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கினார்.

இந்த நான்கு பேரும் சபரிமலையில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதும், இவர்கள் முறைப்படி விரதமிருந்து சபரிமலைக்கு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.