சபரிமலையில் மீண்டும் தடை.

சபரிமலையில் மீண்டும் தடை.

சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் சபரிமலை சர்ச்சைக்குறிய இடமாகிவிட்டது. சென்ற அக்டோபர் 17ம் தேதி நடைதிறக்கப்பட்ட போது, சில மாற்று மத பெண்கள் பிரச்சனைகளை உருவாக்கவே சபரிமலைக்கு சென்றனர். ஆனால், அவர்கள் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை சபரிமலையில் மீண்டும் நடைதிறக்கப்பட உள்ளதால், மீண்டும் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலை இருக்கும் பத்தனம் திட்டா மாவட்டத்தில் சந்நிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில்  இன்று சனிக்கிழமை நவம்பர் 3ம் தேதி இரவு முதல் செவ்வாய்க்கிழமை நவம்பர் 6ம் தேதிவரை 144 தடையுத்திரவு அமல்படுத்தப்படுவதாக பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், போராட்டத்தின் போது, போலீசாரால் தள்ளிவிடப்பட்ட ஐயப்ப பக்தர் சிவதாஸின் உடல் நிலக்கல் பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது