சபரிமலையை கைப்பற்ற துடியாய் துடிக்கும் கேரள கம்யூனிச அரசு

சபரிமலையை கைப்பற்ற துடியாய் துடிக்கும் கேரள கம்யூனிச அரசு

சபரிமலை விஷயமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இந்த ஒருபுறம் இருக்க சபரிமலை சம்பந்தமான வேறொரு வழக்கில் கேரள உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வாதாடிய விதம் சபரிமலையை கைப்பற்றி அதை பணம் கொழிக்கும் வியாபார ஸ்தலமாக மாற்ற கேரள அரசு எவ்வளவு தீவிரமாக முயற்சிக்கிறது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.

கேரள உயர் நீதிமன்றத்தில் பாஜக தலைவர் மோகன்தாஸ் சபரிமலையில் மாற்று மதத்தவரை அனுமதிக்கக்கூடாது என்றும், இத்தகைய வழக்கம் நாட்டின் பல கோவில்களில் உள்ளது என்றும் முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்கள் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. 

"சபரிமலை ஒரு மதச்சார்பற்ற கோவில்.எரிமேலியில் உள்ள வாவர் மசூதியில் இருக்கும் வாவர் ஐயப்பனின் தோழராக இருந்தவர். அதனால், ஐயப்பனை இஸ்லாமியரும் வழிபடுகின்றனர். பாரம்பரியமாக நடத்தப்படும் பேட்டை துள்ளல் என்ற நடனம் வாவர் மசூதியிலிருந்து தான் துவங்குகிறது. மேலும் இந்த வழக்கில் சபரிமலையில் இருக்கும் பழங்குடியினர், முஸ்லீம் வக் போர்ட், கிறிஸ்தவர்கள் ஆகியோரின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். ஏனென்றால், சபரிமலையின் சரித்திரம் இரண்டு விதமாக உள்ளது. அதில் ஒன்று அது பழங்குடியினரின் கோவில் என்பது மற்றொன்று அது முன்னர் ஒரு புத்த விஹாராக இருந்தது என்பது." இது தான் கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் உதிர்த்துள்ள முத்துக்களாகும்.

இதிலிருந்தே தெரிகிறது, பணம் கொழிக்கும் சபரிமலையின் மீது கேரள அரசுக்கு உள்ள ஆர்வம்.