"சபரிமலை புனிதம் காக்க"  நாளை இந்து முன்னணி சரண ஊர்வலம்

"சபரிமலை புனிதம் காக்க" நாளை இந்து முன்னணி சரண ஊர்வலம்

சபரிமலையின் புனிதம் காத்திட வேண்டி சென்னையில் நாளை இந்து முன்னணி சார்பில் சரண கோஷ ஊர்வலம் உட்பட பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து இந்து முன்னணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது : 

சபரிமலை புனிதம் காத்திட கலியுக வரதன் ஐயப்ப சாமியை பிரார்த்தனை செய்து நடத்திடும் சரணகோஷ ஊர்வலம், இந்து முன்னணி பொதுக் கூட்டம் - கூட்டுப் பிரார்த்தனை கீழ்க்கண்டவாறு ஏற்பாடாகியுள்ளது. இதில் சபரிமலை குருசாமிகள், ஐயப்ப பக்தர்கள், ஆன்மீக அமைப்புகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள இருக்கின்றனர். நிகழ்ச்சி கீழ்க்கண்டவாறு ஏற்பாடாகியுள்ளது.

நாள் : 11.12.2018 செவ்வாய்       மாலை : 5 மணி அளவில்
சரண கோஷம் ஊர்வலம், பொதுக்கூட்டம்
இடம் :  மணலி ஐயப்பன் கோயிலில் துவங்கி, மணலி மார்க்கெட் பகுதியை சென்றடையும்.
பக்தர்கள் கலந்துகொள்ளும்  சரண கோஷ ஊர்வலத்தைத் துவக்கி வைப்பவர் உயர்திரு. ஏ.டி. இளங்கோவன் அவர்கள்,  மாநகரத் தலைவர்  முன்னிலை உயர்திரு. ஐயப்பன் அவர்கள்,  மாவட்டத் தலைவர், வடசென்னை
சிறப்புரை : உயர்திரு. த. மனோகரன் அவர்கள் மாநில  செயலாளர்

உயர்திரு. வீரத்துறவி இராம கோபாலன் அவர்கள் நிறுவன அமைப்பாளர்
உயர்திரு. துரை சங்கர் அவர்கள் அகில பாரத ஐயப்பா சேவா சமாஜம் - அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.