சபரிமலை விவகாரத்தில் கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் கருத்து வேறுபாடு

சபரிமலை விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் இருவர் இருவேறு கருத்துக்களை கூறியுள்ளதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சபரிமலைக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் சபரிமலை சர்ச்சைக்குறிய இடமாகிவிட்டது. முறையான விரத விதிமுறைகளை பின்பற்றாமல் விளம்பரத்திற்காக சில இளம்பெண்கள் சபரிமலை செல்ல முயல அதற்கு பந்தள அரச குடும்பம், கோவில் தந்திரி, பக்தர்கள் எதிப்பு தெரிவித்தனர். கேரள அரசு சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பட்டுகளை விதித்துள்ளது. இதனை எதிர்த்து பக்தர்கள் சார்பிலும், பாஜக சார்பிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, கேரள மின்துறை அமைச்சர் மணி,"உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் நடத்தி முடித்து விட்டனர்." என்று கூறியுள்ளார்.

இதனை மறுத்த தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்,"அமைச்சர் மணி எந்த சூழ்நிலையில் இப்படி கூறினார் என்று தெரியவில்லை. சபரிமலையில் மண்டல பூஜை காலம் துவங்கியது முதல் நேற்று வரை இளம் பெண் ஒருவர் கூட சாமி தரிசனம் செய்ய வரவில்லை. சென்னையை சேர்ந்த பெண்கள் அமைப்பினர் சிலர் வருவதாக செய்தி வந்துள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த சிலருக்கு நக்ஸ்லைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.

இரு அமைச்சர்களின் இரு வேறு கருத்துக்களால் கேரளாவில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.