சபரிமலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மேல் முறையீடு

சபரிமலை விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தேவசம்போர்டு மேல் முறையீடு

சபரிமலை கோவிலுக்கு எல்லா வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் திருவாங்கூர் தேவசம்போர்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கால அவகாசம் கேட்டு மேல் முறையீடு செய்துள்ளது. பெண்களை அனுமதிக்க தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்ய வேண்டியிருப்ப்தாலும், பெண்களை அனுமதிப்பதால் தற்போது ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையை சமாளிக்க வேண்டியிருப்பதாலும் கால அவகாசம் தேவைப்படுவதாக மேல் முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.