சபரி மலை விவகாரமும் – அமித் ஷா வின் பேச்சும் -  வக்கிரபுத்தி எதிர்கட்சிகளின் வசை மொழியும். – பகுதி 2

சபரி மலை விவகாரமும் – அமித் ஷா வின் பேச்சும் - வக்கிரபுத்தி எதிர்கட்சிகளின் வசை மொழியும். – பகுதி 2

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய மூன்று கட்சியின் தலைமைக்கும் பல்வேறு கேள்விகளை கேட்க தோன்றுகிறது.  கேரளத்தில் அமித் ஷா, சபரி மலை ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக பேசியதை கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்யும் இந்த கட்சியினர், எப்பொழுதாவது, அக்பர்துன் ஓவாசி, அவரது சகோதரர் சலாலுதீன் ஒவாசி போன்றோரின் இந்துக்களுக்கு எதிராகவும், இந்து மத கடவுள்கள் மீதுதான கேலியான பேச்சுகள் ஆகியவற்றுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்களா என்பதையும்,  பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியான அப்சல் குருவிற்கு ஆதரவாக பல்கலைகழங்களில் தேச விரோத கோஷங்கள் எழுந்த  போது, இவர்களின் கண்கள் மற்றும் காதுகள் அடைக்கப்பட்டுவிட்டனவா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.

     24.12.2012ந் தேதி ஆந்திர மாநிலத்தில் அடிலாபாத் நகரில் நடந்த இஸ்லாமியர்களின் பேரணியில் அக்பரூதின் ஒவாசி பேசியது,   the population of your Hindusitan (India) is 1 billion, while we Muslims are 20 million .  He added that Muslims of India would need only 1 minuted without the police to show the Hindus of India who is more powerful – the Hindustan of 1 billion or the 20 million Muslims.          இதற்கு கண்டனம் தெரிவிக்க காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியினர், மாயாவதி போன்றவர்கள் ஏன் அறிக்கை விடவில்லை?   இவ்வாறு அக்பரூதின் ஒவாசி பேசியவுடன், கூடியிருந்து இஸ்லாமியர்கள் அல்லா கூ அக்பர் என கோஷமிட்டதை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருப்பார்களா?   மும்பை குண்டு வெடிப்பின் குற்றவாளி அஜ்மல் காசபுக்கு தூக்கு தண்டனை விதித்த போது,  இதே ஒவாசி ஏன் நரேந்திர மோடியை தூக்கிலிட கூடாது என கோரிய போதும், If the Muslims of India united like the Muslims of Andhra Pradesh , Narendra Modi would be soon be hanged என வெளிப்படையாக வன்முறையை தூண்டும் விதமாக பேசிய போது, வாய் மூடி மௌனியாக காட்சியளித்தவர்கள், அமித் ஷா பேசியவுடன் கொதித்து எழுவது ஏன்?  ஓட்டு வங்கி அரசியலை தவிர வேறு எதுவும் கிடையாது.   அதை விட கொடுமையான வார்த்தை,   காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான பி.வி.நரசிம்ம ராவ்வைப் பற்றி வெளிப்படையாக ஒவாசி பேசியது,  2012 ஏப்ரல் மாதம் கர்னூல் நகரில் நடந்த பேரணியில் . In the same rally he used the Urdu words katil (murderer), darinda (monster), beimaan (dishonest), dhokebaaz (cheat), and chor (thief) for the former Prime Minister of India P V Narasimha Rao. Owaisi said that if Rao had not died, he (Owaisi) would have killed Rao with his own hands.
 இதை கண்டனம் செய்யக் கூட அன்றைய காங்கிரஸ் கட்சி தயங்கியது, ஆட்சியிலிருக்கும் போது, ஒவாசியின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.    

     இந்திய இறையான்மைக்கு எதிராக அக்பரூதீன் ஒவாசி பேசிய போது, எழுப்பாத கேள்விகள், தெரிவிக்காத கண்டனங்களை, அமித் ஷா பேசியவுடன் கர்ஜனை செய்வது வேடிக்கையாக இருக்கிறது.    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும்  துணை குடியரசு தலைவர் அமீத் அன்சாரியும் பேசியதை விடவா அமித் ஷா பேசி விட்டார்.   10.1.2013ந் தேதி இந்தியா டுடே பத்திரிக்கை அக்பரூதின் ஒவாசியின் 10 விமர்சிக்க தக்க பேச்சுகளை வெளியிட்டுள்ளது.  கோயில்களை இழிவுப்படுத்தியது, பயங்கரவாத செயலுக்கு ஆதரவான கருத்தை முன்வைத்து, வன்முறையை தூண்டும் விதமாக பொது மேடைகளில் பேசியது,  சட்டத்தைப்பற்றிய தவறான கருத்துக்களை பரப்பியது, அஸ்ஸாமில் ஊடுருவிய பங்களாதேஷ் இஸ்லாமியர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கூறியதுடன், தேசிய தலைவர்களை வந்தேரிகளாக சித்தரித்தது, இந்து பழக்கவழக்கங்களை கிண்டலும் கேலியுமாக பேசியது, முறையாக தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதுமட்டுமில்லாமல், மோடியை கொலை செய்யும் அளவிற்கு கருத்துக்களை பரப்பியது, வன்முறையை தூண்டி இந்துக்களை கொல்ல அறைகூவல் விடுத்தது, இது போன்ற  செயல்களின்  போது அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுத்தார்கள் என்பதை தெரிவித்துவிட்டு, அமித் ஷா மீது கண்டன கணைகளை தெடுக்கவும்.

            இந்த நாட்டில் இந்துக்களையும், இந்து தெய்வங்களை இழிவாக பேசியவர்கள் மீது நீதி மன்றங்கள் என்ன நடவடிக்கை எடுத்தன?   1970-ல் சேலத்தில் தி.க.வினர் நடத்திய ஊர்வலத்தில் எம்பெருமான் ராமனுக்கு செருப்பு மாலை, விநாயகர் பெருமானுக்கும் செருப்பு மாலை அணிவித்து, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திய போது, எவர் கேள்வி கேட்டார்கள்?  மாறாக ஊர்வலத்தை புகைப்படம் எடுத்து வெளியிட்ட பத்திரிக்கைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  அப்பொழுதே அமித் ஷா போல் பேசியிருந்தால், இன்று இந்துக்கள் துன்பப்பட  தேவையில்லை.  கருணாநிதியின் அறிக்கைகளும், சொற்பொழிவுகளும், இந்துக்களை கேவலபடுத்தும்விதமாக நடந்து கொண்ட போது, அதை எதிர்க்க  எவரும்  முன்வரவில்லை.  அன்று கருணாநிதியை யாராவது கேள்வி கேட்டிருந்தால், தி.மு.க.வின் போக்கே மாறியிருக்கும்.  இன்றைக்கு அமித்ஷா மீது குற்றச்சாட்டுகளை வைக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகள் வாய் திறக்கவில்லை.  இதற்கு பெயர் வாக்கு வங்கி அரசியல் என்பது தெரியாதா?

     ஜனநாயக்தைப் பற்றி வாய் கிழிய பேசும், மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனநாயகம் எப்படி பட்டது என்பதை பார்க்க வேண்டும்.  தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் கிராமங்களில் பிற அமைப்புகளுக்கு செயல்பட எந்த அனுமதியையும்  மார்கசிஸ்ட் கம்யூனிஸ்டகள் ஒரு போதும் வழங்கியதில்லை.  வேறு கட்சிக் கொடி எதுவும் ஏற்றமுடியாது.  மற்ற கட்சிகளின் கொள்கைப் பிரச்சார உரிமையை ஒருபோதும் மார்கசிஸ்ட்கள் அங்கீகரித்ததும் கிடையாது.  அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பஞ்சாயத்துக்கள், வார்டுகளில் கூட பிற கட்சிகள் போட்டியிட அனுமதியில்லை.  1980 சட்ட மன்ற தேர்தல் நடைபெற்ற தினத்தன்றும் அதற்கு அடுத்த நாளும் , நூற்றுக் கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  அவர்கள் செய்த ஒரே குற்றம், பூத் ஏஜென்டாக பணியாற்றியதுதான்.  இந்த மார்க்சிஸ்ட்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பா.ஜ.க.வின் பிரச்சார வாகனத்தை கைப்ற்றி, அதில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பிரச்சாரம் செய்தார்கள்.   இவர்களின் ஜனநாயகம், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறியவர்களை கொலை செய்வதும், அவர்களின் சொத்துகளை நாசம் செய்வதும் தான். மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய முன்னாள் மாநில பொது செயலாளரும், அமைச்சருமான எம்.வி.ராகவன் உயிர் பிழைத்து இறைவனின் கருணையினால்.  அவரை கொல்ல முடியாமல் போனதால், அவரின் பாம்புப் பண்ணை மற்றும் பறவைகள் சரணாலயம் இரண்டையும் தீயிட்டு கொளுத்தியவர்கள் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள்.

 

ஆக மொத்தத்தில், ஜனநாயகத்தை படுகொலை செய்து, அதனால் மக்களின் ஆதரவை இழந்துவிட்டவர்கள் இன்று அமித் ஷாவை பார்த்து கூச்சலிடுகிறார்கள் என்பது தான் உண்மை.

-ஈரோடு சரவணன்