சம்ஜவ்தா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பெரும் விடுவிப்பு

சம்ஜவ்தா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பெரும் விடுவிப்பு

 சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு,2007-ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பில் குறைந்தது 68 பேர் கொல்லப்பட்டனர்,43 பாகிஸ்தான் குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

சம்ஜோதா குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் புதன்கிழமை சிறப்பு NIA நீதிமன்றம் விடுவித்தது. பஞ்ச்குலா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பாக்கிஸ்தானிய சாட்சிகளை வைப்பதற்கான அனுமதியை கோரிய மனு நிராகரித்தது சிறப்பு நீதிமன்றம்.

குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேரின் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை NIA சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. இவர்களில் நவா குமார் சர்க்கார், ஸ்வாமி அசீமானந்த், லோகேஷ் சர்மா, கமல் சௌஹான், ராஜீந்தர் சவுதாரி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனர். சுனில் ஜோஷி, இந்த தாக்குதலின் தளபதி, டிசம்பர் 2007 ல் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.