சரக்கு இல்லாத காலி டப்பா - பொன் ராதாகிருஷ்ணன்

சரக்கு இல்லாத காலி டப்பா - பொன் ராதாகிருஷ்ணன்

''பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும், தி.மு.க., கூட்டணி, சரக்கு இல்லாத காலி டப்பா,'' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய கப்பல் போக்குவரத்து துறை, இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

ஐ.ஜே.கே., கட்சி, தி.மு.க., அணியில் இணைந்திருப்பதால், பா.ஜ.,விற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாரிவேந்தர் மட்டுமல்ல; எவர் எங்கு சென்றாலும், பா.ஜ., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. பார்ப்பதற்கு பிரமாண்டம் போல காட்சி தரும், தி.மு.க., கூட்டணி, சரக்கு இல்லாத காலி டப்பா. பாகிஸ்தான் மீதான தாக்குதல், பாதுகாப்பு துறை அமைச்சருக்கு தெரியவில்லை என, குற்றம் சாட்டுவது சரியல்ல. தெரிய வேண்டிய அனைவருக்கும் அது தெரிந்துஉள்ளது. பாகிஸ்தான் மீதான தாக்குதல் சம்பவத்தில், பா.ஜ., அரசியல் செய்வதாக கூறுவதும் சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.