சரித்திரம் படைத்த ஷோடஸ மகாலஷ்மி யாகம்

சரித்திரம் படைத்த ஷோடஸ மகாலஷ்மி யாகம்

*திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் இந்து முன்னணி சார்பில் டிசம்பர் 23, 24, 25 ஆகிய தேதிகளில் ஷோடஸ மகாலக்ஷ்மி யாகம் நடைபெற்றது. 

*இதோடு முன்னதாக கோ பூஜை, கஜ பூஜை, அஸ்வ (குதிரை) பூஜை ஆகியவையும், ஆண்டாள் திருக்கல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் ஆகிய வைபவங்களும் நடைபெற்றன.

*ஞாயிறன்று காலை கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கின.

*திங்களன்று 1008 நாட்டு பசுமாடுகளுக்கு பூஜை செய்யும் கோ பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், 10,570 பசுக்கள் கலந்து கொண்டன. எனவே, எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்றது என்பது விளங்கும்.

*திங்களன்று ஷோடஸ மகாலக்ஷ்மி யாகம் இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேச்வரா.சி.சுப்பிரமணியம் தலைமையில் துவங்கியது. ஆர்.எஸ்.எஸ் வடதமிழக தலைவர் கே.குமாரசாமி முன்னிலை வகித்தார்.

*கோ பூஜையை கொங்குநாடு முன்னேற்ற கழகத்தலைவர் பெஸ்ட்.எஸ்.ராமசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா.எம்.சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

*ஆண்டாள் திருக்கல்யாணம் அஹோபில மடம் ஆஸ்தான வித்வான் ஏ.எம்.ராஜகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இதனை தேசிய பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் ஆணையத்தின் துணைத்தலைவர் எல்.முருகன் துவக்கி வைத்தார்.

* ஷோடஸ மகாலக்ஷ்மி யாக சிறப்பு தபால் தலையை மேகாலயாவின் முன்னாள் ஆளுநர். வி.ஷண்முகநாதன்,. அஞ்சல் துறை மேற்கு மண்டலத்தலைவர்  அபிமன்யூ ஆகியோர் வெளியிட இந்து முன்னணி மாநிலத்தலைவர் காடேச்வரா.சி.சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.

* தமிழக பாஜக தலைவர் டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தேசிய  செயலாளர் ஹெச்.ராஜா முதலான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

*திருக்கழுக்குன்றம் அன்புச்செழியன் சுவாமிகள், கல்லார் அகஸ்தியர் ஞான பீடத்தின் தலைவர் சரோஜினி மாதா முதலான மகான்களும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்த யாகத்தால் தமிழகத்தில் நிலவளமும், நீர்வளமும், தொழில் வளமும் பெருகி எங்கும் சுபிட்சம் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.