சர்ச்சை போலீஸ் அதிகாரி இடமாற்றம்

சர்ச்சை போலீஸ் அதிகாரி இடமாற்றம்

இளம் ஐ.பி.எஸ் அதிகாரியான யதீஷ் சந்திரா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இவர் 2011ம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்ச்சி பெற்றார். கேரளாவில் பணியில் சேர்ந்த இவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். 2015ம் ஆண்டு அங்கமலியில் சி.பி.ஐ தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியதில் சர்ச்சையில் சிக்கினார்.

பின்னர், சபரிமலை விவகாரத்தில் கேரள பாஜக தலைவர் சுரேந்திரன், இந்து ஐக்கிய வேதி தலைவி சசிகலா ஆகியோரை கைது செய்தது. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சபரிமலை யாத்திரையின் போது தடுத்தது என்று இன்றும் பரபரப்பாக பேசப்படுகிறார் யதேஷ் சந்திரா. ஆனால், அவர், மத்திய அமைச்சரிடம் நடந்து கொண்ட விதம் கேரள அரசுக்கே தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டதால் சபரிமலை எஸ்.பியாக இருந்த இவர் தற்போது திருச்சூர் காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் யதேஷ் சந்திரா.