சர்வதேச இராமாயண திருவிழா நிறைவு

சர்வதேச இராமாயண திருவிழா நிறைவு

தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்த ஐந்தாவது சர்வதேச இராமாயண திருவிழா நிறைவுப்பெற்றது. கடந்த 17 ஆம் தேதி தொடங்கிய திருவிழா பல்வேறு நாட்டு இராமாயணத்தை அரங்கேற்றிய பின்  நிறைவுபெற்றது.  

வங்கதேசம், பிஜி தீவுகள், இந்தோனேசியா, இலங்கை என பல்வேறு நாடுகள் இதில் பங்கேற்று தங்கள் நாட்டு இராமாயணத்தை மேடையில் அரங்கேற்றின. 

இராமாயணம் தெற்காசியாவின் பண்பாட்டு அடையாளமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.