சாதேவ்  அடல்

சாதேவ் அடல்

மறைந்த முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 94வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. முன்னதாக அவரது நினைவாக 'சாதேவ் அடல்' என்ற  நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று அங்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, நாடாளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்  மற்றும்  பாஜக தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அமரர் வாஜ்பாயின் பிறந்த தினமான இன்று, நல்லாட்சி தினமாக கடைபிடிக்கப்படுகிறது.