சாமுவேல் மாத்யூ மீது மான நஷ்ட வழக்கு

சாமுவேல் மாத்யூ மீது மான நஷ்ட வழக்கு

கொட  நாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளைக்கு தமிழக முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக டெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூ வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. முதலமைச்சர் இதனை கடுமையாக மறுத்தார்.  இந்நிலையில் தன்னை பற்றி தவறான செய்திகளை வெளியிட்டு ஆவணபடம் தயாரித்ததற்காக சாமுவேல் மாத்யூஉட்பட ஆறு பேர்  மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1.10 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.