சாரதா சிட் மோசடியும் -  மம்தாவின் நாடகமும்.

சாரதா சிட் மோசடியும் - மம்தாவின் நாடகமும்.

சி.பி.ஐ. மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து தர்ணா என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்திவிட்டார்.  இந்த நாடகத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரும் ஊழலின் மொத்த உருவங்கள்.  ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காம்ரேட்டுகள், பல லட்சம் கோடி கொள்ளையடித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளார்கள்.   உச்ச நீதி மன்றத்தின் வழிக்காட்டுதலின் படி மேற்கு வங்க மாநில உயர் நீதி மன்றத்தில் நடந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தவர்கள் தான் தற்போது மத்திய அரசை வசைபாடுகிறார்கள்.   சாரதா சிட் பண்ட்ஸ் மோசடியின் மொத்த விவரங்கள் தெரிந்தால்,  தேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கு  மோசடி செய்த பணம் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வரும்.

          சாரதா சிட் மோசடியில் சுமார் ரூ30,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன.   இது வெறும் நிதி மோசடி மட்டுமில்லை, தேசத்திற்கு எதிரான மோசடி, தேச பாதுகாப்பிற்கு உலை வைக்கும் மோசடியாகும்.  இது பற்றி முழுமையான விவரங்களை பார்க்க வேண்டும்.  உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறிய ஒரு செய்தி மிகவும் ஆபத்தான் செய்தியாகும், மேற்கு வங்க மாநில எல்லை வழியாக பாகிஸ்தானில் ரூ ஐந்து லட்சம் கோடியை பதுக்கி வைத்துள்ளார்கள்.  பதுக்கி வைத்திருப்பவர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது.  சாராத சிட் பண்ட் பணம் பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாஹூதீன் பங்களா தேஷ் க்கு கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் பங்களா தேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியில் மேற்கு வங்கம், ஒடீஸா, அஸ்ஸாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் உள்ள அப்பாவி மக்களிடம் கொள்ளையடித்த  பல கோடி ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

          2009 முதல் 2012 வரை மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பணத்தின் மதிப்பு ரூ850 கோடியாக இருக்கும் என நிதி நுண்ணறிவு பிரிவு தங்களது அறிக்கையில்  தெரிவித்துள்ளது.  இதில் பெரும் பகுதி சாராதா சிட் மோசடி பணமாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளது.  இவ்வாறு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பணமானது, பங்களா தேஷ் நாட்டிலுள்ள இஸ்லாமிய வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.   பங்களா தேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கியானது, பயங்கரவாத அமைப்பான ஜமாத் உல் முஜாஹூதின் பங்களா தேஷ் அமைப்பிற்கு நிதி உதவி அளிக்கும் வங்கியாகும்.  இவ்வாறு வழங்கும் நிதியானது, இந்தியாவிலும், பங்களா தேஷ் நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல் நடத்த தேவையான ஆயுதங்கள் வெடி பொருட்கள் வாங்க கொடுப்பதாகவும் அமுலாக்க பிரிவினர் தெரிவித்துள்ளார்கள்.   மேற்கு வங்க மாநிலத்திலிருந்து இறுதியாக இஸ்லாமிய வங்கிக்கு சென்ற பணம் ரூ 60 கோடி எனவும் தங்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

          பங்களா தேஷ் நாட்டில் உள்ள இஸ்லாமிய வங்கி கொல்கத்தாவில் உள்ள  சாரதா சிட் பண்ட் நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள முக்கயமான அரசியல் புள்ளியிடம் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இதன் காரணமாக சாராத சிட் பண்ட் மோசடியில் உள்ள பணம், குவைத் மற்றும் சௌதி அரேபியாவில் நிலம் வாங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  அமுலாக்க பிரிவினர் 2014-ம் வருடம் மே மாதம் அப்துல் பாரிக் பிஸ்வாஸ் என்பவரை  தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.  இவரிடம் நடத்திய விசாரனையில், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பசர்ஹாத் பகுதியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் இவரது சகோதரர்  என தெரிய வந்தது.   அப்துல் கணக்கு வைத்துள்ள 16 வங்கிகளில் ரூ120 கோடியை  சகோதரர் குலாம் ஆஸம்  முதலீடு செய்துள்ளதும்,   சாராத சிட் பண்ட் மோசடி பணத்தை ஜமாத் உல் முஜாஹூதின் அமைப்பிற்கு கொடுப்பவர் என்பதும்  இறுதியில் தெரிய வந்தது.  சாரதா சிட் பண்ட் மோசடி மூலம் கிடைத்த நிதியை அப்துல் மூலம் டாக்காவிற்கு அனுப்பட்டு, மேற்படி நிதியானது வங்கிகளிலும், ரியல் எஸ்டெட் மற்றும் சில நிறுவனங்களில் முதலீடு செய்யவும், குறிப்பிட்ட நிதியை JMB   அளித்தாகவும் கூறப்படுகிறது.    ( www.pressreder.com )

                இது பற்றிய முழு விசாரனையை நடத்திய பங்களா தேஷ் நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமிய வங்கியில் முதலீடு செய்துளள பணமானது, சௌதி அரேபியா, குவைத், மெக்ஸிக்கோ போன்ற நாடுகளுக்கு பணமாற்றம் செய்ய்பபட்டுள்ளது.   மேற்படி பணம் மாற்றமானது மீன்டும் ஹவாலா மூலமாக இந்தியாவில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி கிடைக்கிறது.  இந்த செயலில் ஈடுபட்டுள்ள நான்கு என்.ஜி.ஓ. என்றும்,  மேற்கு வங்க மாநிலத்தில் பர்துவான் மாவட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பிற்கு நிதி உதவி செய்த என்.ஜி.ஓ.வும் அதில் ஒன்று என குறிப்பிட்டுள்ளது.  அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட அல்காயிதாவிற்கு உதவி செய்த என்.ஜி.ஓ.கள்.   அது குவைத்தை தலைமையிடமாக கொண்டுள்ள Revival of Islamic Heritage (RIHS)-ம், சௌதி அரேபியாவில் உள்ள Rabata-al-Alam-al Islami and al- Nahiyan  -ம்  இரண்டு அமைப்பும் முதன்மையானதாகும்.  

          நீண்ட காலமாகவே மேற்கு வங்க மாநிலத்தில், ஜமாத் உல் முஜாஹூதீன் பங்களா தேஷ் அமைப்பானது, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிடமிருந்து கோடிக் கணக்கில் நிதி பெற்றுள்ளது.  இது பற்றி இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் மேற்கு வங்க மாநில முதல்வரான புத்ததேவ் பட்டாச்சாரிய,  நீண்ட காலமாகவே நாங்கள் கூறி வருவது, பயங்கரவாத அமைப்புக்கும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.   அகமது ஹூசைன் இம்ரான் அதிக அளவு நிதியை எல்லை வழியாக பங்களா தேஷக்கு கடத்திய வழக்கின் குற்றவாளி என்றும்,  திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த பல உறுப்பினர்கள் இன்னும்  ஜமாத் உல் முஜாஹூதின் பங்களா தேஷ் அமைப்புடன் தொடர்பில் உள்ளார்கள் என கூறினார்.   மேற்கு வங்க மாநிலத்திலிருந்து வெளி வரும் ஆனந்த் பஜார் பத்திரிகாவில் 2014-ல் வெளி வந்த கட்டுரையில் இது பற்றி விலா வாரியாக எழுதப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

          சாரதா சிட் பண்ட் மோசடி பணத்தில் பயங்கரவாத அமைப்பிற்கு நிதி உதவி கிடைக்க வழி வகை செய்தவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசாபா உறுப்பினர் அகமது ஹூசைன் இம்ரான்.  இவர் முன்னாள் சிமி அமைப்பின் மேற்கு வங்க தலைவர்.  ஜமாத் உல் முஜாஹூதீன் பங்களா தேஷ் அமைப்பிற்கு மட்டுமில்லாமல், சிமி தடைசெய்யப்பட்ட பின்னர் இந்தியன் முஜாஹூதின் என்ற பெயரில் துவக்கப்பட்ட அமைப்பிற்கும் சராதா சிட் பண்ட் மோசடி பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் விசாரனையில் தெரிய வந்துள்ளது.   இது பற்றி முன்னாள் ஐ.பி.யின் சிறப்பு இயக்குநர் திரு. தீனேஷ்  சந்திரா நாத் ,   மம்தாவிற்கு அகமது ஹூசைனின் பூர்வீகம் நன்கு தெரிந்தும் , அரசியல் காரணங்களுக்காக தனது கட்சியில் இணைத்துக் கொண்டார்.  அகமது ஹூசைனுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் மட்டுமில்லாமல், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யுடனும் தொடர்பு உள்ளதாக குறிப்பிட்டார்.  சிட்பண்ட் மோசடி பணத்தை பாகிஸ்தானில் பதுக்கி வைத்திருப்பதும் அகமது ஹூசைனின் ஆலோசனைபடியே பதுக்கப்பட்டுள்ளது. 

          மிகவும் ஆபத்தான ஒரு செய்தி, சாரதா சிட் பண்ட் மற்றும் ரோஸ் வேலி நிறுவனத்திலும் நடந்த பண மோசடியில் கிடைத்த பணம், மேற்கு வங்க மாநில பங்களா தேஷ் எல்லையில் அமைந்துள்ள சில இடங்களில் பதுக்கி வைக்க்பபட்டுள்ளது.  மேற்படி பங்களா தேஷ் நாட்டிற்கு கடத்தப்படுவதாகவும், இந்திய ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தானில் கொடுத்து விட்டு, அதற்கு இணையாக  கள்ள நோட்டுகளை இந்தியாவில் புழகத்தில் விடுவதில்  கிள்ளாடியான குலாம் ஆஸம் மூலம் இந்த செயல்பாடுகள் நடக்கின்றன.  பாரத தேசத்தில் கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழகத்தில் உள்ள மாநிலம் மேற்கு வங்கம்.  இதுவரை கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்கள் குறிப்பாக மால்டா மாவட்டத்தினர்.  ஆகவே ஊழல் என்ற பார்வையிலிருந்து, தேசத்தின் பாதுகாப்பு என்ற கண்ணேட்டத்தில் இந்த பிரச்சினையை அனுக வேண்டும்.  மம்தாவின் செயல்பாடு பாரத தேசத்தின் இறையான்மைக்கும், தேசத்தின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். 

- ஈரோடு சரவணன்