சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது - சுஷ்மா ஸ்வராஜ்

சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது - சுஷ்மா ஸ்வராஜ்

இந்தியாவிற்கெதிரான தனது பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டை பாகிஸ்தான் மாற்றிக்கொள்ளாத வரையில் அந்த நாட்டுடன் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். 

இந்தியாவில் குருதாஸ்பூரில் உள்ள  தேரா பாபா நானக்கிலிருந்து பாகிஸ்தானில் கர்தார்பூர்ரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பிற்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் சென்று வரும் வகையில் சாலை அமைக்க பாகிஸ்தானில் இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அமைச்சர்கள் ஹர்சிம்ரத் கௌர் பாதல், ஹர்தீப்சிங் புரி மற்றும் பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் கலந்து கொண்டனர். சீக்கியர்களின் புனித தலங்களான இந்த இரண்டு இடங்களுக்கும் இடையே சாலை அமைக்க ஒத்துழைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா 20 ஆண்டுகளுக்கும் மேலாக வற்புறுத்தி வந்துள்ளது.

இதனை குறிப்பிட்ட மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பாகிஸ்தானில் சார்க் மாநாடு நடைபெற்றால் இந்தியா அதில் கலந்து கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. என்று திட்டவட்டமாக கூறினார்.

சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் படி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்திருந்தது இங்கு குறிபிடத்தக்கது.