சினிமாச்செய்திகள் (22.12.2018)

சினிமாச்செய்திகள் (22.12.2018)

*விக்ரம் பிரபு  நடித்துள்ள அசுர குரு படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக மகிமா நம்பியார் நடிக்கிறார். படத்தை இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ராஜ்தீப் இயக்கியுள்ளார்.

*தொடர் படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் ஓய்வெடுக்க குடும்பத்தினருடன் அமெரிக்கா செல்கிறார். 15 நாட்கள் பயணமாக செல்லும் அவர் ஓய்வேடுக்கவே செல்வதாகவும், எந்த சிகிச்சைக்காகவும் அல்ல என்றும் அவரது தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

* சென்னையில் 16வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 13 முதல் 20 வரை நடைபெற்றது. இதில் 59 நாடுகளிலிருந்து 159 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழில் பரியேறும் பெருமாள், 96, மெர்குரி, வட சென்னை, ராட்சசன் உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக பரியேறும் பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.

*இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளியான பிங்க் திரைப்படம் தமிழில் தயாராகிறது. அமிதாப்பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜீத் நடிக்கிறார். யுவன் இசையமைக்கிறார். இந்த படத்தை அஜீத்தின் பிறந்த நாளான மே1ம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

*பாகுபலி படத்தை அடுத்து பிரபாஸ் "சாஹோ" என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் ஷ்ரத்தா கபூர், அருண்விஜய், மந்திரா பேடி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.