சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

* சர்கார் பட விவகாரத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீதான எஃப்.ஐ.ஆர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என மத்திய குற்ற பிரிவு போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பு கால அவகாசம் கோரியதால் வரும் 14ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது .

* இயக்குனர் சேரன் வெகுகாலமாக படம் இயக்காமல் இருந்தார். தற்போது அவர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும், "திருமணம் சில திருத்தங்களுடன்" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இது திருமண பத்திரிக்கை போன்று வித்தியாசமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

* முரளிக்கு பின் நான் பார்த்த தன்மையான நடிகர் விஜய் சேதுபதி தான். விரைவில் நாங்கள் இணைய இருக்கிறோம் என்று இயக்குனர் சேரன் கூறியுள்ளார்.

*நடிகர் மோகன் லால் கதாநாயகனாகவும், நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாகவும் நடிக்க நடிகர் பிரித்திவிராஜ் இயக்கும் மலையாள திரைப்படத்திற்கு 'லூசிஃபெர் ' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசரை மலையாள திரையுலகின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான மம்முட்டி வெளியிட்டுள்ளார்.