சினிமா செய்திகள்(12.01.2019)

சினிமா செய்திகள்(12.01.2019)

*நேற்று முன்தினம் வெளியான 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய படங்களை வெளியான சில மணிநேரங்களிலேயே இணையதளத்தில் வெளியிட்டு படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளனர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தினர்.


*பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கதிர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடித்த படம் 'சிகை'. இந்த படம் விற்பனையாகததால் நேற்று முன்தினம் ஆன்லைனில் வெளியிட்டனர். இனி தியேட்டர்களில் வெளியட முடியாத படங்கள் ஆன்லைனில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

*இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனன் முன்பு கோலிசோடா - 2வில் நடித்தார். இப்போது தேசிங்கு பெரியசாமி இயக்கும் ;கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்து வருகிறார். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் கவுதம் வாசுதேவ மேனன் முழுநேர நடிகராகக்கூடும் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

*சர்கார், சண்டைக்கோழி - 2, சாமி - 2 என்று கீர்த்தி சுரேஷ் நடித்த தமிழ் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் அவர் தெலுங்கு பட உலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.