சினிமா செய்திகள் (19.01.2019)

சினிமா செய்திகள் (19.01.2019)

* இனி நான் நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தப்போவதாகவும் தயாரிப்பு, இசையமைப்பு மற்றும் டைரேக்ஷன் பொறுப்புகளை தகுந்த நபர்களிடம் ஒப்படைக்க போவதாக நடிகரும் தயாரிப்பாளரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

*நடிகர் அஜீத் குமார் நடிக்க ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை வித்யா பாலனும் நடிக்க உள்ளார்.  

*நடிகர் அஜீத்குமார் நடிப்பில் வெளிவந்துள்ள 'விஸ்வாசம்' திரைப்படத்தை பார்த்து சென்னை காவல் துறை ஆணையர் சரவணன் பாராட்டியுள்ளார். "படத்தில் கதாநாயகன், கதாநாயகி டூ வீலரில் செல்லும் காட்சியில் இருவரும் ஹெல்மெட் அணிந்து செல்வது, பெற்றோர் தங்கள் கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்க கூடாது என்ற செய்தியை தெரிவிப்பது, நாயகனும் நாயகியும் காரில் செல்லும் காட்சிகளில் சீட் பெல்ட் அணிந்திருப்பது ஆகியவை சமூக பொறுப்புள்ளவை. இவை மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.", என்று அவர் கூறியுள்ளார்.

* 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தை இயக்கிய அருண்குமாரும் நடிகர் விஜய் சேதுபதியும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்கின்றனர். இந்த படத்திற்கு 'சிந்துபாத்' என்று பெயரிடப்பட்டுள்ளது.

* கமலஹாசன் காஜல் அகர்வால் நடிக்க ஷங்கர் இயக்கும் இந்தியன் - 2 படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது.