சின்னம் மாறியதாக பொய் சொன்னால் ஜெயில் - தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

சின்னம் மாறியதாக பொய் சொன்னால் ஜெயில் - தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் உள்ள, அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், வி.வி.பி.ஏ.டி., என்ற, நவீன ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இயந்திரத்தில், ஒருவர், எந்த சின்னத்திற்கு ஓட்டளித்தாரோ, அந்த சின்னம் அச்சாவதை பார்க்க முடியும். இதற்கு, ஏழு வினாடிகள் ஆகும். ஒருவர், தான் ஓட்டளித்த சின்னம் அச்சாகாமல், வேறு சின்னம் அச்சாவதை கண்டால், புகார் அளிக்கலாம். 

பொய் சொன்னால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.சின்னம் மாறி அச்சாவதாக ஒருவர், முறையான விண்ணப்பத்தில் புகார் செய்தால், உடனடியாக, ஓட்டுச்சாவடி அலுவலர், ஓட்டுப்பதிவை நிறுத்த வேண்டும். ஓட்டுச்சாவடியில் இருக்கும், வேட்பாளர்களுடைய முகவர்கள் முன்னிலையில், அவர் ஒரு ஓட்டை பதிவு செய்து, அவர் ஓட்டளித்த சின்னம் அச்சாகிறதா என, சரிபார்க்க வேண்டும்.

''நவீன ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தான் ஓட்டளித்த சின்னம் அச்சாகவில்லை என்று, யாராவது பொய் சொன்னால், வழக்கு பதிவு செய்யப்படும். அவருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்க, சட்டத்தில் இடம் உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.