சிபிஐயை உள்ளே விட மறுக்கும் சந்திரபாபு நாயுடு  மற்றும் மம்தா பானர்ஜி

சிபிஐயை உள்ளே விட மறுக்கும் சந்திரபாபு நாயுடு மற்றும் மம்தா பானர்ஜி

நவம்பர் 16ந் தேதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு , ஆந்திர மாநிலத்தில் மத்திய புலனாய்வு துறையான சி.பி.ஐ.க்கு தடை விதித்து உத்திரவிட்டுள்ளார்.  இதன் காரணமாக இனி ஆந்திராவில் சி.பி.ஐ. துறையினர் யாரையும் விசாரிக்க முடியாது.  மோடி மீது உள்ள வெறுப்பின்  காரணமாக இந்த அறிவிப்பு என பலர் கூறினாலும், உண்மையில் இந்த உத்திரவிற்கு பின்னால் ஒரு சதி உள்ளது.  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் முகாம்களும், மாவோயிஸ்ட்களின் முகாம்களும் அதிக அளவில் உள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம். இதை நாம் கூறவில்லை, முன்னாள் ராவின் உயர் அதிகாரி கூறியது.   இனிமேல் எந்த பயங்கரவாதியும நாட்டின் மற்ற இடங்களில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தி விட்டு, ஆந்தராவில் அடைக்கலம் புகுந்து கொண்டால்  போதும்.  விசாரணை வளையத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.   ஏற்கனவே, சந்திரபாபு நாயுடு மற்றும் அவது மகன் நாரா லோகேஷ் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.  இதை விசாரிக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மனைவி திருமதி ஒய்.எஸ். விஜயம்மா உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இந்நிலையில் சி.பி.ஐ. மாநில அரசின் அனுமதியில்லாமல் விசாரணை நடத்த இயலாது.  ஆகவே மத்தியில் உள்ள அரசை மிரட்டும் தொனியில் எடுத்த நடவடிக்கை என்பது வெட்ட வெளிச்சாமாக தெரிகிறது.

       சி.பி.ஐ.யில் நடக்கும் குளறுபடிக்கு காரணமான வியாபாரி சதீஸ் சனா என்பவன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உற்ற தோழன்.    இந்த வருடம் செப்டம்பர் மாதம் 11ந் தேதி ஆந்திர பிரதேச உச்ச நீதிமன்றத்தில், முறைகேடு மற்றும் ஊழல் காரணமாக,  முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் அவரது மகன்  லோகேஷ் மீதும் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்திரவிட வேண்டும்  என மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.  இந்த மனுவை தாக்கல் செய்தவர் முன்னாள் நீதிபதி கே.சர்வன் குமார் என்பவர்.  குற்றச்சாட்டில்,  தொழில் துவங்க முன் வந்த நிறுவனத்திடம் ரூ 21,000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது என்பதும்,   2013 –ல் ஆந்திர மாநில உயர் நீதி மன்றம் ,  சந்திரபாபு நாயுடு  தனது சொத்துக் கணக்கை தவறாக சமர்ப்பித்துள்ளார் எனவே சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என உத்திரவிட்டதை மீண்டும் விசாரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

        தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக கருதி உயர் நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு  உத்திரவிட்டதை மறைத்து, ஆந்திராவிற்கு சிறப்பு நிதி ஒதுக்கவில்லை என்ற அபத்தமான ஒரு வாதத்தை முன் வைக்கிறார்.  சி.பி.ஐ. மீது தடைவிதித்த கையோடு, அறிவித்துள்ள அறிவிப்பு ஆந்திர மாநிலத்தில் பணியாற்றும் மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட தபால் துறை,  துறைமுகம், வருமான வரித் துறை, பி.எஸ். என்.எல். , எல்.ஐ.சி. , ரயில்வே, ரிசர்வ் வங்கி, உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களோ அல்லது அதிகாரிகள் முறைகேடுகளில் சிக்கினால், சி.பி.ஐக்கு பதில் மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு துறையே அவர்கள் மீது வழக்கு பதவி செய்து சோதனை நடத்தும் என கூறியுள்ளது, அதிகாரி வர்க்கம் கொள்யைடிக்க உதவிகரமாக இருக்கும் என்பதை மறந்து விடக் கூடாது.  இதனால் மத்திய அரசின் நிறுவனங்களையும் மொத்த ஊழல் மயமாக்க முயலுகிறார்.  இவர் மீது முன்னாள் முதல்வரின் மனைவி சுமத்துப்பட்டுள்ள  குற்றச்சாட்டுகள், Prevention of Corruption Act, Prevention of Money Laundering Act, A.P. Land Grabbing Act,  Benami Transactions (Prohibition ) Act.   கீழ் விசாரணை நடத்த வேண்டும் என்கிறார்.  இதற்கு முகாந்திரம் இருப்பதாக கூறி சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்  நீதி மன்றம் உத்திரவிட்டது.  உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க கோரி மேல் முறையீடு செய்த போது, உச்ச நீதி மன்றம்  தடை விதிக்க மறுத்ததுடன், கீழ் நீதி மன்றத்தில் முறையீடு செய்து கொள்ளலாம் என்றார்கள்.  இதுவே சந்திரபாபு நாயுடுவின் நம்பக்தன்மைக்கு எடுத்துக் காட்டாகும்.

       மத்திய அரசின் துறையில் முறைகேடுகள் நடந்தால், மாநில அரசு விசாரணையை நடத்தும் என கூறுவது அபத்தமானது.  முதல்வரின் மகன் மீதும், மனைவியின் மீதும் ஊழல் புகார் கூறிய பின்னரும் கூட விசாரணையை நடத்த மாநில அரசு முன் வரவில்லை, நீதிமன்றத்தின் மூலம் தான் விசாரணையே நடத்தப்படுகிறது என்பதை துணிந்து வெளியே கூறவும் அல்லது, மாநில அரசு சட்ட ரீதியாக விசாரணை நடத்தியது என்பதற்கு முழுமையான விவரங்களை கொடுக்க சந்திரபாபு நாயுடு முன் வருவாரா என்பதையும் விளக்க வேண்டும்.  

       சந்திரபாபு நாயுடு மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள்  Liquor scam,  Yeluru Scam,  Maganese  Mines Lease Scam,  Land Allocation to IMG BHARATHA L&T,  Raheja IT Park Scam, Emmar Properties Scam> Heritage Foods Scam. Power Purchase Agreement Scam, Reliance Gas Scam,  Association with Satyam Scam   போன்றவையாகும்.  இந்த ஊழல்களில் சுமார் 12,367 கோடி முறைகேடு நடந்திருப்பதாகவும், மேலும் 10,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இந்த முறைகேடுகளை நீதி மன்றத்தில் விவரமாக தாக்கல் செய்த கட்சி காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் பி.சங்கர் ராவ் என்பதை தற்போது நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.   இதில் சில ஊழல்களை பற்றி தெரிந்து கொண்டால், சந்திரபாபு நாயுடுவின் திருவிளையாடல்கள் புரியும்.   10 ஆண்டுகளுக்கு முன் ஆண்டு வருமானம் ரூ36,000 என குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடுவின் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ19.29 கோடியாகும். இதில் வேடிக்கை என்னவென்றால், சந்திரபாபு நாயுடுவை விட அவரது  3 வயது பேரனின் சொத்து, அவரது  சொத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம், இதையெல்லாம் விசாரணை  செய்தால், கருணாநிதியை போலவும், ஜெயலலிதாவை போலவும் கோபம் வரத்தான் செய்யும்.  இது பற்றி ஒரு பத்திரிக்கையில் வந்த வரி,  without any business is biggest scamster.  His nine-year rule as Chief Minister was a saga of corruption.  He never ordered CBI inquiry into any scams.   என்றால் புரிந்து கொள்ளுங்கள்.

       மேற்கு வங்கம் - சி.பி.ஐ.யின் மீது கோபக் கனலை கக்கியவர்களில் அடுத்தவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.  இவரது கட்சியினர் நடத்திய ஊழல்கள் வெட்ட வெளிச்சாமானதும்,  அவர்களில் பலர் சி.பி.ஐ. விசாரணை வளையத்துக்குள் வந்திருப்பதும் கோபக் கனலுக்கு காரணமாக அமைந்துள்ளது. சாரதா சிட்  பண்ட் ஊழல்,     Rose Valley Scam , Narada  Scam ஊழல் போன்றவை பிரபலமானவை.    இந்த ஊழல்களில் கைது செய்யப்பட்டு சி.பி.ஐ.யால் விசாரிக்கப்படுபவர்கள்  மம்தா கட்சியை சார்ந்தவர்கள்.  2014 மே மாதமே, மேற்கு வங்க விளையாட்டு மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார்.  இவரது கைது என்பது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் உச்ச நீதி மன்றம் கொடுத்த உத்திரவு கிடையாது.  ஆட்சிக்கு வருவதற்கு முன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உச்ச நீதி மன்றம் சாரதா சிட்  பண்ட் மோசடி வழக்கை சி.பி.ஐ. கொண்டு விசாரிக்க வேண்டும் என உத்திரவிட்டது.  ஆகவே உண்மையான கோபம் காங்கிரஸ் மீது விழ வேண்டிய நிலையில், பொது மக்களிடம் உண்மையை மறைத்து, மோடி மீது பழி விழ வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறார்கள்.

       பாராளுமன்றத்தில் திரினாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுதீப் பந்தோப்பாத்யாய, ரூ17,000 கோடி           ,Rose Valley Scam மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து தபஸ் பால் என்ற பாராளுமன்ற உறுப்பினரும் கைது செய்யப்பட்டார்.  இவர்கள் கைது செய்யப்பட விசாரணை  நடத்திய சி.பி.ஐ.யின் மீது பழி போடுவதற்கு பதிலாக அனுமதி கொடுத்த மாநில அரசை ஏன் விமர்சிக்கவில்லை என்பது புரியவில்லை.    சாரதா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் மதன் மித்ரா, மம்தாவின் வலது கரம் என்பதாலும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பதாலும் மம்தா கோபம் மோடி மீது விழுந்தது.  

       எனவே சி.பி.ஐ. மீது கோபம் கொள்வதில் இரண்டு மாநில முதல்வர்களும் வக்கிரமான வகையில் அறிக்கை விடுவதும், பேசுவதுமாக இருக்கிறார்கள்.   இதை விட முக்கியமான நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில், மாநில அரசு ஓட்டுக்கான சிறுபான்மையினரை தாஜா செய்வதும், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்பின் மீது விசாரணையை நடத்த எந்த மாநில அரசாவது முன்வந்துள்ளதா என்பதை மம்தாவும், சந்திரபாபு நாயுடும் தெரிவிக்க வேண்டும்.

       இஸ்லாமிய பயங்கரவாதமும்,  நக்ஸல் பயங்கரவாதமும், ஆந்திர மாநிலம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் புறையோடியுள்ளது.  இது பற்றிய முழுமையான விசாரணையை நடத்த சி.பி.ஐ. மற்றும் ஐ.பி.யால் தான் முடியும் என்பது உலகறிந்த ரகசியமாகும்.  இனிமேல் பயங்கரவாதி மேற்படி இரண்டு மாநிலங்களில் ஒன்றில் பதுங்கியிருந்தால்,  விசாரணை நடத்த சி.பி.ஐ.க்கு இவர்கள் அனுமதி கொடுப்பார்களா என்பதையும் தெரிவித்திருக்க வேண்டும்.   The A.P. Government ‘s notification disables central government’s police power  to inverstigate and prosecute 63 different central statutes in the territory of Andhra Pradesh .  Its includes Prevention of Money Laundering Act and Income Tax Act.   The  notification also includes Anti-hijacking Act which is extremely serious.   It also includes Unlawful Activities Prevention Act which is meant to keep our terrorist groups.   என ஒரு மூத்த உளவுத் துறை அதிகாரி குறிப்பிட்டார்.    ஆந்திராவின் உத்திரவு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்பதும், இதன் மூலம் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. 

       சில மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியை கொல்வதற்கு திட்டம் தீட்டியதாக ஐந்து பேர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  இவர்களில் ஒருவர் வராவர ராவ் நக்ஸல் இயக்கத்தின் முக்கியமான நபர்.  இவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.  இனிமேல் இவரை ஆந்திராவில் விசாரணை நடத்த சிபிஐயால் இயலாது.  சந்திரபாபு நாயுடு அனுமதி கொடுப்பாரா என்ற சந்தேகம் எழுகிறது.  ஏன் என்றால் சில ஆண்டுகளுக்கு முன் சந்திரபாபு நாயுடு இவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியவர்.   சி.பி.ஐ.யின் மூலமாக தான் பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதவாதிகளின் சதி திட்டங்கள் தெரிய வரும் போது, மாநில அரசை எச்சரிக்கை செய்வதும், அதற்குறிய உதவிகள் செய்வதும் மத்திய அரசின் கடமையாக இருந்து வருகிறது.  2003-ல் சித்தூரில் சந்திரபாபு நாயுடுவை மாவோயிஸ்ட்கள் கொல்ல முயன்றதும், மத்திய ஐ.பி. மற்றும் சி.பி.ஐ. மூலமாக தகவல் கொடுக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது.

        2016 அக்டோபர் மாதம் ஆந்திர மற்றும் ஒடிஸா காவல் துறையினரின் கூட்டு தேடுதல் வேட்டையில் மலங்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களின் உயர் தலைவர்கள் சிலர் உள்ளிட்ட 27 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  இதற்கு பழி வாங்க மாவோயிஸ்ட்கள் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷ் இருவரையும் கொல்லப்போவதாக கடிதம் எழுதியுள்ளார்கள்.   இதை முறியடிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் உதவியில்லாமல் நடைபெறாது என்பது நன்கு தெரிந்தும், சி.பி.ஐ. உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவது, அரசியல் காரணங்களை தவிர வேறு காரணங்கள் கிடையாது.  இது பற்றி  முன்னாள சி.பி.ஐ. அதிகாரி கூறியதை நினைவு படுத்த வேண்டும், in  case there is a terrorist attack or a plane hijack within the territory of Andhra Pradesh, the CBI cannot spring into action in their role as central police with their own accord.   They (CBI) have to wait till Naidu gives permission.  If the state government wants, they can ever protect the terrorists.  It just means that with this order, Naidu can indulge in whatever illegalities he and his coterie want and still escape the law.  என குறிப்பிட்டு, இது மிகவும் ஆபத்தான விஷயமாகும் என தெரிவித்துள்ளார்.

      

-ஈரோடு சரவணன்