சிறுமி மரணத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குற்றவாளி - சென்னை  சிறப்பு நீதிமன்றம்

சிறுமி மரணத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ குற்றவாளி - சென்னை சிறப்பு நீதிமன்றம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழந்த சம்பவத்தில் பெரம்பலூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ ராஜ்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கி 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது சென்னை சிறப்பு  நீதிமன்றம்.

2012ம் ஆண்டு வீட்டுவேலைக்காக ராஜ்குமார் வீட்டிற்கு வந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாள். அவளது சாவில் மர்மம் இருப்பதாக தொடர்ப்பட்ட வழக்கில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர் ஜெய்சங்கர் ஆகிய இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 42 ஆயிரம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.