சிலவரிகளில் சில செய்திகள் (26.12.2018)

சிலவரிகளில் சில செய்திகள் (26.12.2018)

* இஸ்லாமிய பெண்களின் உரிமை மற்றும் திருமண பாதுகாப்பு சட்ட மசோதா நாளை மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுகிறது. இந்த மசோதாவை மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாளை மக்களவையில் தாக்கல் செய்கிறார்.

* இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் தலைநகர் தில்லியிலும் உத்திரப்ரதேசத்தின் பல இடங்களிலும் தேசிய புலனாய்வு பிரிவு திடீர் சோதனை நடத்தியது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*தமிழ்நாட்டில் 'கேனைன் டிஸ்டம்பர்' என்ற வைரஸ் நோய் வேகமாக நாய்களிடையே பரவி வருவதாகவும் எனவே, நாய்கள் வளர்ப்பவர்கள் தங்கள் நாய்களுக்கு இந்த நோய்க்கான தடுப்பூசியை போட்டுக்கொள்மாறும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.

*தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று சந்தித்து பேசினார்.

*இடை நிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் 3வது நாளாக இன்றும் தொடர்கிறது.

*3 வங்கிகள் இணைப்பை எதிர்த்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்தினர்.பொதுத்துறை வங்கி சேவைகள் முடங்கியபோதும், தனியார் வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

*நிதி முறைகேடுகளை களையும் வகையில் வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனங்களின் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்யும் பணிகளை மத்திய கண்காணிப்பு ஆணையம் துவங்கியுள்ளது.

*தேசிய சித்த மருத்துவ தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

*சென்னை ராயப்பேட்டையில் உள்ள தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஆதார் பதிவு மையம் துவங்கப்பட்டுள்ளது.

*ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 16 ரூபாய் அதிகரித்து சவரன் ரூ.23,912/- ஆக உள்ளது.