சில கேள்விகளும் -  சந்தேகங்களும்

சில கேள்விகளும் - சந்தேகங்களும்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக சில கேள்விகள் எழுகின்றன.  கேள்விகள் எழுகின்ற நிலையில் சந்தேகங்களும் உருவாகுகின்றன.   மிகவும் மோசமான குண்டு வெடிப்பு சம்பவம் என்பதில் இரு வேறுபட்ட கேள்விகளும் சந்தேகங்களும் எழவில்லை.  இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் கட்சிகளாகட்டும் அல்லது மத அமைப்புகளாட்டும், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சிலர் வருத்தம் தெரிவித்தார்கள், சிலர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதை விட கண்டும் காணாமல் இருந்தது வியப்பை அளிக்கிறது.

          இலங்கை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தமிழக தவ்ஹீத் ஜமாத்துக்கும் தொடர்பு உண்டா?   

தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அறிக்கையில், எவ்வித தொடர்பும் கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது.   திருச்சியில் நடைபெற்ற ஷிர்க் மாநாட்டிற்கு, இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுவதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் அரசியல் கட்சிகள் எழுப்பவில்லை.   ஏன் என்றால் 2016-ல் திருச்சியில் ஷிர்க் மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கையின் தேசிய தவ்ஹீ்த் ஜமாத் அமைப்பினர், மாநாட்டில்,  இஸ்லாமிற்கு எதிரான சிலை வழிப்பாட்டை அழிக்க வேண்டும் என்ற தீர்மானத்தின்  படி,  இலங்கையில் புத்தர் சிலையை சேதப்படுத்தினார்கள்.  இதற்காக  அப்துல் ரசாக் என்பவன் கைது செய்யப்பட்டு, பகிரங்கமாக மன்னிப்பு கேட்டதால் விடுவிக்கப்பட்டான்.  சில உண்மையை அம்பலப்படுத்த வேண்டும்.  தமிழகத்தில் பிறந்த வாகாபி மத குரு பாஷித் புகாரியும், இலங்கையின் தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் ஐஹரான் ஹஷீமும், தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் பொறுப்பாளர் பி.ஜே.வும், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹருல்லாவும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து பல செயல்களை செய்துள்ளார்கள்.  இது உண்மை என்றால், தி.மு.க. ஜவஹாருல்லாவுடன் தேர்தல் கூட்டணி   வைத்திருப்பதால் தான் கண்டனம் செய்யவில்லை என்ற கருத்து நிலவுவது உண்மையா என்ற சந்தேகம் எழுகிறது.

          பாகிஸ்தானுக்கும் இலங்கை முஸ்லீம்களுக்கும் என்ன மாதிரியான உறவு ?   

1947 இந்தியா துண்டாட முனைந்த போது, பாகிஸ்தான் என்ற நாடு உருவாக குரல் கொடுத்தவர்கள் இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள்.  1971-ல் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்கு ஆதரவாக இந்தியா போரில் ஈடுபட்ட போது, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என ஒருமித்த குரல் கொடுத்தவர்கள்.   இலங்கையில் முஸ்லீம்களிடையே வளர்ந்து வரும் தீவிரவாதத்தை தக்க வைத்துக் கொள்ள லஷ்கர் –இ-தொய்பா முழு அளவில் உதவி புரிந்தது.  இலங்கையிலிருந்து தமிழகத்தை தாக்குதவற்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. யின் திட்டப்படி, தமிழகத்தைச் சார்ந்த தமீம் அன்சாரி மற்றும் இலங்கையை சார்ந்த அருன் செல்வராஜ் இருவரும் உளவு பார்த்தாக 2014-ல் கைது செய்யப்பட்டார்கள்.  இதன் மூலம், இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாதின் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்தது.  தமிழகத்தில் அச்ச உணர்வை ஏற்படுத்தவும் இதற்காக தமிழக தவ்ஹீத் ஜமாத், இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத்துடன்  இணக்கமாக இருந்தது .  இந்த சந்தேகங்களுக்கு முறையான பதில் கிடைக்குமா என்பதும் சந்தேகமாக தோன்றுகிறது.   

          தி.மு.க. தி.க. உள்ளிட்ட கட்சிகள் ஏன் கண்டனத்தை தெரிவிக்கவில்லை?  

இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்துவர்களுக்கும் ஆதரவாக குரல் கொடுக்கும் இவர்கள், இலங்கையில் குண்டு வெடிப்பிற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பு ஏற்றவுடன், அதை கண்டித்து அறிக்கை விடவில்லை, கண்டன குரல்களை கூட எழுப்பவில்லை.   இலங்கையில் தமிழ் பேசும் கிறிஸ்துவர்கள் வழிபடும் நேரத்தில் குண்டு வெடிக்கப்பட்டுள்ளது.  தமிழர்களை அழிப்பதற்காகவும் நடத்தப்பட்டதாக, இங்குள்ள தமிழ் ஆர்வலவர்கள் கட்டுரைகளை எழுதுகிறார்கள்.  ஆனால் குண்டு வைத்த இஸ்லாமியர்களை தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்க தயக்கம் காட்டுகிறார்கள்.   

          இலங்கையில் பர்தாவிற்கு தடை விதிதத்தை ஏன் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?     

மார்க்க ஒழுக்கத்துக்கு கட்டுப்பட்டு அவள் தன்னை மூடி மறைத்துக் கொள்ள பயன்படுத்தும் சாதனமே பர்தா என அசைக்க முடியாதா நம்பிக்கை கொண்ட இஸ்லாமியர்கள் ,  பிரான்ஸ் நாட்டில் பர்தாவிற்கு தடை விதித்த போது, தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் ஆர்பாட்டங்களை நடத்தினார்கள்.  இந்த ஆர்பாட்டத்திற்கு தி.மு.க. தி.க. உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் ஆதரவளித்தன.  ஆனால் இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின், அந்த நாட்டு அரசு பர்தாவிற்கு தடை விதித்துள்ளது.  மேற்படி தடையானது மே மாதம் 1ந் தேதி முதல் அமுலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் உள்ள பிரிவினைவாதிகள் குரல் எழுப்பவில்லை.  ஏன் எனவும் தெரியவில்லை.  ஒரு வேளை, குரல் எழுப்பினால், தங்களையும் பயங்கரவாதிகள் என சிறைபிடித்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.  இலங்கை அரசின் உத்திரவிற்கு ஜமைத்துல் உலாமா அமைப்பின் ஊடக செயலாளர்  பைசல் பாரூக் என்பவர்,  இந்த உத்திரவை மனதார வரவேற்கிறோம்.  நாட்டின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு.  இதே மனோபாவம் தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் உருவாகுமா அல்லது உருவாகும் போது, அதை தடுக்க  தி.மு.க. மற்றும் தி.க.வினர் முயலமாட்டார்களா

          பர்தாவில் கூட மூன்று விதமான வழி முறைகள் உள்ளன.   இந்த மூன்று முறைகளும் தடை செய்யப்பட்டுள்ளன.  உலகில் கிறிஸ்துவர்கள் மீதோ அல்லது இஸ்லாமியர்கள் மீதோ தாக்குதல் நடததினால் எதிர்ப்பு குரல் மட்டும் கொடுக்காமல், வசைபாடும் கட்சிகள் தற்போது வாய் மூடி மௌனமாக இருப்பதின் நோக்கம் என்ன என்ற சந்தேகங்கள் எழுகின்றன.

          குண்டு வெடிப்பிற்கு தொடர்புடையவர்களை கைது செய்யும் போது, பயங்கரவாதிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தலைவர்கள் ஏன் இலங்கை குண்டு வெடிப்பு குற்றவாளிகள் கேரளத்தில் தொடர்பில் இருந்தார்கள் என கூறிய போது எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் ?   

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களுடன் தேர்தல் கூட்டு என்ற பெயரில் உறவாடுவதும், அவர்களின் செயல்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பரப்புவதும் தங்களது கடமையாக எண்ணி செயல்படுகிறார்கள்.   இலங்கை குண்டு வெடிப்பின் சூத்தரதாரிகள் கேரளத்தில் தங்கியிருந்ததாகவும், அவர்களில் சிலர் சென்னை மண்ணடியில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுவதை  மறுக்கும் விதத்தில் தமிழக அரசும் வாய் திறக்கவில்லை.  உண்மையில் தமிழகத்தில் குறிப்பாக கோவை மற்றும் சென்னையில் குண்டு வெடிப்பின் குற்றவாளிகள் தங்கியிருந்தததை பற்றிய முழு சி.பி.ஐ. விசாரனையை கோரி,  ஏன் தமிழக அரசியல் கட்சிகள் குறிப்பாக தி.மு.க. கம்யூனிஸ்ட்கள் கோரிக்கை வைக்கவில்லை.  

          இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் போல், தமிழகத்திலும் நடத்தபோவதாக தகவல்கள் கூறுகின்றன இதற்காக தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏன் தி.மு.க. கம்யூனிஸ்ட்கள் அரசுக்கு கோரிக்கை வைக்கவில்லை. ?

இலங்கையில் நடந்தது தப்பி தவறி தமிழகத்தில் நடந்திருந்தால், கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளின் குடுப்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறுவார்கள்.   உடனடியாக தமிழக அரசின் மீது குற்றத்தை சுமத்தி அரசை ராஜினாமா செய்ய போராட்டங்களை நடத்துவர்கள்.  பயங்கரவாதிகளின் செயலுக்கு மோடி தான் மூலக் காரணம் என பொய் பிரச்சாரத்தை ஊக்குவிப்பதுடன், தங்களது தொலைக் காட்சிகளில் விவாதம் நடத்துவார்கள்.