சில வரிகளில் சில செய்திகள்

சில வரிகளில் சில செய்திகள்

*ஸ்ரீசத்ய சாய் சஞ்சீவனி குழந்தைகளுக்கான இதய நல மையம் மும்பையில் நேற்று திறக்கபட்டது. இது குழந்தைகளுக்கான பிரத்யேக இதய நல மையம். இதில் சிகிச்சைகள் முழுவதும் இலவசமே. இங்கே பணம் செலுத்துமிடம் கிடையாது.  முகவரி : Sri Sathya Sai Sanjeevani Centre for Child Heart Care & Training In Pediatric Cardiac Skills, Plot No. 2 A, Sector 38,Kharghar near 102 RAF BATTALION, Navi Mumbai.

* ஒன்றரை மாதத்தில் பெட்ரோல் விலை ரூ.10.86 குறைந்துள்ளது. 

*வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.6.52 குறைநதது. 

*சென்னை, கிருஷ்ணா தெருவில் உள்ள ராமகிருஷ்ணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் நாளை புத்தக மாற்று விழா நடைபெற உள்ளது. அங்குள்ள இன்போசிஸ் ஹாலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் உங்களுக்கு இனி உபயோகம் இல்லை என்று நினைக்கும் நல்ல நிலையில் உள்ள புத்தகத்தை கொடுத்து விட்டு உங்களுக்கு தேவையான புத்தகத்தை பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

* வட அமெரிக்காவின்  அலாஸ்கா மாகாணத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது லிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. 

*தில்லியில் போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் தங்கள் தன்மானத்தை இழந்துவிட்டனர். தமிழர்களின் மானத்தை வாங்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

* ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில் கடந்த ஓர் ஆண்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலையும் அதற்கான காரணங்களையும் தாக்கல் செய்யுமாறு பள்ளி கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.